இந்தியாவின் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளி நவம்பர் 16ஆம் தேதி வரும் நிலையில், அனைத்து வர்த்தக அமைப்புகளும் கொரோனாவால் ஏற்பட்ட வர்த்தகச் சரிவை ஈடு செய்ய மிகப்பெரிய தள்ளுபடி விற்பனைக்குத் தயாராகி வருகிறது. அதிலும் குறிப்பாக ஈகாமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான், ரிலையன்ஸ் ரீடைல் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவும் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ளவும் மிகப்பெரிய திட்டத்தைத் தீட்டி வருகிறது.
பொதுவாகவே தீபாவளி காலத்தில் இந்தியாவில் வர்த்தகச் சந்தை மிகவும் சிறப்பாக இருக்கும், ஆனால் இந்த ஆண்டுக் கொரோனா தொற்று மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் மக்கள் அதிகளவில் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதன் எதிரொலியாக இந்த ஆண்டுப் பண்டிகை கால விற்பனையில் பெரும் பகுதி ஈகாமர்ஸ் துறை தட்டிச்செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7 பில்லியன் டாலர்
இந்த வருடத்தின் தீபாவளி பண்டிகை காலத்தில் இந்தியாவில் இருக்கும் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் சுமார் 7 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தைப் பெறும் என ரெட்சீர் ஆய்வறிக்கை கூறுகிறது.
கடந்த வருடம் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் வெறும் 3.8 பில்லியன் டாலர் அளவிலான வரத்தக்ததைப் பெற்ற நிலையில், கொரோனா எதிரொலியின் காரணமாக இந்த ஆண்டு ஈகாமர்ஸ் நிறுவனங்கள் பெரிய அளவிலான வர்த்தகச் சந்தையைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளிப்கார்ட், அமேசான்
இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களான அமேசான் கிரேட் இந்தியின் ஷாப்பிங் விற்பனைக்கும், பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேர் விற்பனையை அறிவிக்கத் தயாராக உள்ள நிலையில், இந்த விற்பனையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல அமேசான் மற்றும் பிளிப்கார்ட் கிட்டதட்ட 1.5 லட்சம் ஊழியர்களைப் புதிதாகச் சேர்க்க முடிவு செய்துள்ளது.
இந்த எண்ணிக்கையில் பெரும் பகுதி டெவரி மற்றும் சப்ளை செயின் பிரிவில் பணியில் அமர்த்தப்படுவதாகத் தெரிகிறது.
இந்திய ரீடைல் சந்தை
கொரோனா பாதிப்பால் இந்திய ரீடைல் சந்தை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது, தற்போது மக்கள் தங்களது தினசரி தேவைகளுக்காக மட்டுமே பொருட்களை வாங்குவதால் ரீடைல் சந்தை பெருமளவிலான வர்த்தகத்தை இழந்து தவித்து வருகிறது.
இந்நிலையில் பண்டிகை கால விற்பனை வருவதால் ரீடைல் சந்தை இழந்த வர்த்தகத்தைத் திரும்பப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் வர்த்தகம்
இந்தப் பண்டிகை காலத்தில் ஆன்லைன் வர்த்தகங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறும் என்பதற்கு முக்கியக் காரணங்கள் இதோ.
1. இந்தக் கொரோன காலத்தில் ஆன்லைன் ரீடைல் சந்தைக்கு அதிகளவிலான வாடிக்கையாளர்கள் புதிதாக வந்துள்ளனர்.
2. ஈகாமர்ஸ் நிறுவனங்கள் தற்போது புதிய ஷாப்பிங் மாடல்களை அறிமுகம் செய்துள்ள காரணத்தால் நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்யத் துவங்கியுள்ளனர்.
3. கொரோனா காரணத்தால் பல கடைகள் மூடப்பட்ட நிலையில், வகைப்படுத்தப்பட்ட துறை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.
4. ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் ஜியோமார்ட்-ன் மாபெரும் வெற்றி
இவை அனைத்தும் இந்தப் பண்டிகை கால விற்பனையில் ஈகாமர்ஸ் மிகப்பெரிய வெற்றி அடையச் சாதகமாக இருக்கும் வாய்ப்புகள்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications