விரைவில் வருகிறது பறக்கும் டாக்சி.. நெரிசல் அதிகமாக இருக்கும் நகரங்களை குறி வைத்து புதிய திட்டம்!

பெங்களூரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கான பயணம் விரைவில் சிரமமற்றதாக மாறப்போகிறது. கெம்பேகவுடா விமான நிலையத்தை இயக்கும் பெங்களூர் சர்வதேச விமான நிலையம் (BIAL) மற்றும் சர்லா ஏவியேஷன் ஆகியவை நவீன விமான போக்குவரத்து தீர்வுகளை வழங்க ஒரு ஒத்துழைப்பு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த கூட்டணி, கர்நாடகாவில் மேம்பட்ட விமான போக்குவரத்து தீர்வுகளுக்கான எங்கள் அர்ப்பணிப்பை குறிக்கிறது என்று BIAL நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ X பதிவில் கூறியுள்ளது.

 விரைவில் வருகிறது பறக்கும் டாக்சி.. நெரிசல் அதிகமாக இருக்கும் நகரங்களை குறி வைத்து புதிய திட்டம்!

சர்லா ஏவியேஷன் நிறுவனம் தனது X தளத்தில், மும்பை, பெங்களூரு, டெல்லி மற்றும் புனே போன்ற நாட்டின் மிகவும் நெரிசலான நகரங்களில் நான்கை குறிவைத்து விமான இயக்கத்தை எளிதாக்க செயல்பட்டு வருகிறது. "நாங்கள் விமான ஓட்டத்தை தற்போதைய உபர் அல்லது ஓலாவைப் போலவே மலிவு விலையில் வழங்க முயற்சி செய்து வருகிறோம். பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு இது அணுகக்கூடியதாக இருக்கும். அதுமட்டுமின்றி போக்குவரத்துக்கு நெரிசலைத் தவிர்க்க உதவும் என்று சர்லா ஏவியேஷன் கூறியுள்ளது.

இதன் மூலம் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கு ரூ.1,700 கட்டணத்தில், வெறும் 19 நிமிடங்களில் பயணித்துவிடலாம் என்று சர்ளா ஏவியேஷன் இணையதளம் கூறியுள்ளது. இதே தூரத்திற்கு பிரீமியம் விமானங்களுக்கு 152 நிமிடங்கள் எடுக்கும் மற்றும் அதே 37.5 கிமீ தூரத்திற்கு ரூ. 2,500 செலவாகும்.

பெங்களூருவை தளமாகக் கொண்ட சர்ளா ஏவியேஷன் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அட்ரியன் ஷ்மிட், LinkedIn-இல் "பெங்களூருவின் நெரிசல் சவால்களை சமாளிக்கும் வகையில், பெங்களூர் சர்வதேச விமான நிலைய லிமிடெட் உடனான எங்கள் கூட்டாண்மையை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

1936-ஆம் ஆண்டு விமானி உரிமம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணியான சர்ளா தக்ரால் நினைவாக சர்ளா ஏவியேஷன் பெயரிடப்பட்டது. "தற்போது இந்திரா நகரில் இருந்து விமான நிலையத்துக்குச் செல்ல 1.5 மணிநேரம் ஆகும். மிக விரைவில், சர்ளா ஏவியேஷனின் பறக்கும் டாக்சிகள் மூலம் வெறும் 5 நிமிடங்களாகக் குறைப்போம். பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள தலைமைத்துவத்தால் நான் உண்மையிலேயே ஈர்க்கப்பட்டேன், அதன் தொலைநோக்குப் பார்வை எங்களைப் போன்ற இளம் நிறுவனங்களுக்கு எல்லைகளைத் தாண்டி சிந்திக்க வைக்கிறது என்று எழுதியிருந்தார்.

விமான பயணத்தை எளிதாக்குவதற்கான இந்த கூட்டு முயற்சி எப்போது தொடங்கும் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால் BIAL நிறுவனத்தின் அறிக்கையில் 2 முதல் 3 ஆண்டுகளில் தொடங்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் முதலில் ஒரு முன்மாதிரி கேப்பை உருவாக்க வேண்டும். அதைத் தொடர்ந்து வான்வெளி திறன் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அதன் பிறகே சில வழித்தடங்களில் எவ்வாறு இயக்கலாம் என்பதை ஆராய்வோம்.

பறக்கும் டாக்ஸிகள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டால் கண்டிப்பாக பொதுமக்களுக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும். இது போன்ற புது கண்டுபிடிப்புகள் தொடங்கப்பட்டால் இதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+