இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் விரைவில் டிஜிட்டல் ரூபாய் அதாவது e-rupee சில முக்கியமான விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் சோதனை திட்டத்தை உருவாக்க உள்ளோம் என அறிவித்துள்ளது.

இந்த சோதனை திட்டத்தின் வெற்றி மற்றும் அதில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கப்பட்ட பின்பு பிற சேவைகளுக்கும், வர்த்தகத்திற்கும் இந்த சோதனை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
மேலும் e-rupee குறித்த விபரங்கள், பயன்கள், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற அனைத்து விஷயங்களையும் ஆர்பிஐ அவ்வப்போது மக்களுக்கும், வர்த்தக சந்தைக்கும் அறிவிக்கப்படும் என Central Bank Digital Currency-யின் (CBDC) கான்செப்ட் அறிக்கையில் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் e-rupee பயன்படுத்தப்பட்டு உள்ள டெக்னாலஜி, டிசைன், அதன் பயன்பாடுகள், எப்படி மக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்படும் என்பது போன்ற அனைத்து விஷயங்கள் குறித்தும் Central Bank Digital Currency-யின் (CBDC) கான்செப்ட் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது.
டிஜிட்டல் ரூபாய் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வர்த்தக சந்தையில் இருக்கும் பல்வேறு விரி விதிப்பு, வரி ஏய்ப்பு பிரச்சனைகளுக்கு இது தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications