இன்று பல டிஜிட்டல் சேவைகளிலும், பணப் பரிமாற்ற சேவைகளிலும் மொபைல் வேலெட் பயன்படுத்தப்படுவது வழக்கமாக உள்ளது, குறிப்பாக மொபைல் ரீசார்ஜ், ஆன்லைன் டாக்ஸி புக்கிங், ஆன்லைன் பேமெண்ட் சேவை ஆகியவற்றில் மொபைல் வேலெட் உள்ளது.
இந்த மொபைல் வேலெட்களை ரிசர்வ் வங்கி ஒரு நிலையான வங்கி கணக்குகளாக மாற்ற முடிவு செய்து இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. ஆர்பிஐ-யின் இந்த முடிவின் மூலம் அனைத்து ப்ரீபெய்டு இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்-ம் இனி வங்கி கணக்குகளைப் போல் வர்த்தகம் செய்யவும், சேவை அளிக்கவும் முடியும்.
எளிதாகப் பணப் பரிமாற்றம்
இதன் மூலம் ஒரு வாடிக்கையாளர் மொபைல் வேலெட்-ல் இருந்து பணத்தை வங்கிகளுக்கு அனுப்ப முடியும், இதுமட்டும் அல்லாமல் ஒரு மொபைல் வேலெட்-ல் இருந்து பிற நிறுவனத்தின் மொபைல் வேலெட்-களுக்கும் பணம் அனுப்ப முடியும். இதுநாள் வரையில் இப்படியொரு சேவைகள் மொபைல் வேலெட்-ல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெபாசிட் அளவு இரட்டிப்பு
இதேபோல் மொபைல் வேலெட், ப்ரீபெய்டு கார்டு போன்ற ப்ரீபெய்டு இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்-க்கு இதுவரை 1 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே பேலென்ஸ் வைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று இதன் அளவீட்டை 2 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்தியது.
RTGS மற்றும் NEFT பரிமாற்ற முறை
மேலும் இந்த மொபைல் வேலெட்-கள் மூலம் பேமெண்ட் செய்யவும், பேமெண்ட் பெறவும் அனைத்து ப்ரீபெய்டு இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்-க்கும் வங்கி துறையில் பணப் பரிவர்த்தனைக்காகப் பயன்படுத்தும் RTGS மற்றும் NEFT முறையைப் பயன்படுத்த ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
ஏடிஎம், POS இயந்திரம்
இதேபோல் மக்கள் மொபைல் வேலெட்-ஐ வைத்து ஏடிஎம்களில் பணத்தை வித்டிரா செய்யவும் முடியும், இதேபோல் பாயின்ட் ஆப் சேல்ஸ் இயந்திரத்தில் பணத்தைச் செலுத்தவும் முடியும் வரையில் மாற்றங்கள் கொண்டு வர ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
வங்கி கணக்குகள் தேவை
இப்புதிய அறிவிப்புகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்தால் மாணவர்கள், குழந்தைகளுக்கு வங்கிகளில் கணக்கைத் திறக்க வேண்டிய அவசியம் இருக்காது. அனைத்து தேவைகளும் இந்த மொபைல் வேலெட் பூர்த்தி செய்யும், இதேபோல் சிறு தொகையை மட்டுமே பணப் பரிமாற்றம் செய்வோருக்கும் இந்த மொபைல் வேலெட்களை வைத்தே நிர்வாகம் செய்ய முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications