பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், 20% எத்தனால் கலவை பெட்ரோல் வாகனங்களின் மைலேஜை எவ்வளவு குறைக்கும் என்பதற்கான விவரங்களை வெளியிட்டுள்ளது. முன்னதாக மத்திய அமைச்சகம், எத்தனாலில் எரிசக்தி அடர்த்தி, பெட்ரோலைவிட குறைவாக உள்ளது. இதனால், இதை பயன்படுத்தும்போது, மைலேஜ் சிறிதளவு குறையும் என தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை, "10% எத்தனால் வாகனங்களுக்கு ஏற்கனவே உகந்தவாக வடிவமைக்கப்பட்டு, E20 க்கு மாற்றப்பட்ட 4 சக்கர வாகனங்களில், 1% முதல் 2% வரை மைலேஜ் குறைவு காணப்படலாம். அதேபோல், E20 க்கு தனியாக வடிவமைக்கப்படாத மற்ற வாகனங்களில், 3% முதல் 6% வரை மைலேஜ் குறைவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. E20 எத்தனால் கலந்த பெட்ரோல் வாகனங்களின் மைலேஜைக் கடுமையாகக் குறைக்கும் என சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த நிலையில், அதை மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை மறுத்துள்ளது.

E20 காரணமாக மைலேஜ் மிகப்பெரிய அளவில் குறைகிறது என்பது பொய்யானது. எஞ்சின் டியூனிங் (engine tuning) மேம்படுத்தல் மற்றும் E20-க்கு பொருத்தமான உதிரி பாகங்கள் பயன்படுத்துவதன் மூலம், எரிபொருள் திறன் குறைப்பு மிக மிகக் குறைவாக இருக்கலாம் என்றும் அரசு தெரிவித்தது. இந்தியாவின் முக்கியமான வாகன உற்பத்தியாளர்கள் ஏற்கனவே இந்த மாற்றங்களை அப்டேட் செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
E20-க்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட புதிய வாகனங்கள் ஏற்கனவே 2023 ஏப்ரலில் வெளியிடப்பட்டுள்ளன. E20 எரிபொருள் வாகனங்களின் செயல்திறன், எரிபொருள் நுகர்வு ஆகியவற்றில் எந்தவொரு முக்கியமான பாதிப்பும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கார்புரேட்டர் மற்றும் ஃப்யூவல் இஞ்செக்ஷன் வாகனங்கள் இரண்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அறை வெப்ப நிலையிலும், வெப்பமான சூழலிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, எந்தவொரு எஞ்சின் சேதமும் ஏற்படவில்லை. 1 லட்சம் கிலோமீட்டர் வரை சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதில், செயல்திறன், அனுபவம் அல்லது wear and tear ஆகியவற்றில் வேறுபாடு தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காரில் இருக்கும் உதிரி பாகங்கள், குறிப்பாக ரப்பர் சீல்கள் மற்றும் கேஸ்கெட்டுகள், பழைய வாகனங்களில் 20,000 முதல் 30,000 கிமீ ஓட்டிய பிறகு மாற்ற பரிந்துரை செய்யப்படுகிறது. இவை அதிகச் செலவு அல்ல. சாதாரண சர்வீசிங்கின் போது மாற்றக்கூடியவை. எத்தனால் என்பது பெட்ரோலை மாற்றும் சிறந்த மாற்று எரிபொருளாக, கார்பன் டைஆக்சைடு (CO₂) வெளியீட்டை குறைக்கிறது. எத்தனால் தற்போது அரிசி, மக்காச்சோளம், பழுது வந்த உணவுப் பொருட்கள் மற்றும் விவசாய கழிவுகள் ஆகியவற்றிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.
2014-2015 முதல் இன்று வரை எத்தனால் கலவை மூலம் ரூ.1.4 லட்சம் கோடி வெளியூர் நாணயம் சேமிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ரூ.1.2 லட்சம் கோடி எத்தனால் கொள்முதல் மூலம் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. E20 கலவை மூலம், இதுவரை 700 லட்சம் டன் CO₂ உமிழ்வுகள் குறைக்கப்பட்டுள்ளன.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications