நியூயார்க், அமெரிக்கா: ஐநா பொது சபையின் 80ஆவது பொதுக்குழு கூட்டம் நியூயார்க்கில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. ஐநா உறுப்பு நாடுகள் சார்பாக அந்தந்த நாட்டின் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஐநா பொது சபையில் உரையாற்றிய வண்ணம் இருக்கின்றனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட இந்த கூட்டத்தில் உரையாடியதை பார்த்தோம். இந்தியா சார்பாக இந்த ஆண்டு பிறந்த நரேந்திர மோடி பங்கேற்கவில்லை . பிரதமர் மோடிக்கு பதிலாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐநா பொது குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது எல்லை தாண்டிய பயங்கரவாதம் , வரி வர்த்தகம் என பல்வேறு விஷயங்களை குறிப்பிட்ட ஜெயசங்கர் , பாகிஸ்தானை கடுமையாக சாடினார்.

சுதந்திரம் அடைந்தது முதலே இந்தியா பயங்கரவாதம் எனும் சவாலை எதிர்கொண்டு வருகிறது. உலக பயங்கரவாதத்தின் மையமான ஒரு நாட்டை தான் நாங்கள் எங்களுடைய அண்டை நாடாக கொண்டிருக்கிறோம். கடந்த பல தசாப்தங்களாகவே நடக்கும் சர்வதேச பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர்கள் அனைவருமே அந்த ஒரு நாட்டை சேர்ந்தவர்களாக தான் இருக்கிறார்கள் . ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து நடந்த பயங்கரவாத தாக்குதலும் இதற்கு உதாரணம் என குறிப்பிட்டு இருந்தார்.
பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார் . பயங்கரவாதத்தை தங்களின் கொள்கையாகக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு எதிராக அனைத்து சர்வதேச நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என அப்போது அவர் வலியுறுத்தினார். பயங்கரவாத செயல்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் நிதி உதவி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என ஜெய்சங்கர் குறிப்பிட்டார். அதாவது நிரந்தர மற்றும் நிரந்தரமில்லாத உறுப்பினர்கள் எண்ணிக்கையை விரிவுபடுத்த வேண்டும் என கூறிய அவர் இந்தியா பெரிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறது என தெரிவித்தார் . ஐநா பொது சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் வேண்டும் என்பதை அவர் மறைமுகமாக வலியுறுத்தினார்.
உலகம் முழுவதும் தற்போது நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், திடீரென விதிக்கப்படும் வரி விதிப்புகள் உள்ளிட்டவை வர்த்தக நடைமுறைகளை நிலையற்றதாக மாற்றியிருக்கின்றன என சுட்டிக்காட்டிய அவர் சர்வதேச சமூகம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் எனக் கூறினார். இந்த நவீன உலகிற்கு இந்தியா மூன்று விதமான அணுகுமுறைகளை கொண்டிருக்கிறது என குறிப்பிட்ட ஜெய்சங்கர் முதலில் சுயசார்பு, சுயபாதுகாப்பு, சுய நம்பிக்கை ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு இந்தியா செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications