சென்னை: ரெக்கரிங் டெபாசிட் எனப்படும் தொடர் வைப்புத்தொகை (RD) என்பது இந்தியாவில் வழங்கப்படும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் நாம் குறிப்பிட்ட தொகையை சேமிக்கலாம். இதில் கொடுக்கப்படும் வட்டியுடன், உங்கள் சேமிப்பு வளர்ந்து கொண்டே இருக்கும். தற்போது ஒரு நிதி நிறுவனம் இந்த வகை RDகளுக்கு அதிக வட்டி வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. அவற்றின் விவரங்களைப் பற்றிப் பார்ப்போம்.
இந்த ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திற்கு நீங்கள் தபால் நிலையங்கள், பேங்குகள் மற்றும் நிதி நிறுவனங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் மூலம், நீங்கள் செலுத்தும் தொகை உங்களுக்கு ஒரு சேமிப்பாக இருக்கும். பல்வேறு வகையான RD திட்டங்கள் உள்ளன. அதில் உங்களுக்கு ஏற்ற திட்டத்தை, நீங்கள் தேர்வு செய்யலாம். மேலும் 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை, RDகளில் நீங்கள் முதலீடு செய்யலாம். அதன் கால அளவைப் பொறுத்து 2.5 % முதல் 7 % வரை உங்களின் முதலீடு தொகைக்கு வட்டி வழங்கப்படலாம்.

தற்போது ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் (SFL) என்னும் நிதி நிறுவனம் புதிதாக டிஜிட்டல் முறையிலான பிக்சட் டெபாசிட் மற்றும் ரெக்கரிங் டெபாசிட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கி அல்லாத நிதி நிறுவனமான (NBFC), ஸ்ரீராம் ஃபைனான்ஸ் தற்போது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் FD மற்றும் RD திட்டங்களை மக்களுக்கு வழங்குகிறது. மேலும் அதற்கு அதிக வட்டி வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 22ஆம் தேதி முதல், ஸ்ரீராம் ஒன் ஆப் மற்றும் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக RD திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளியான அறிவிப்பின்படி 12 மாதம் முதல் 23 மாதங்கள் வரையிலான ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திற்கு 8.50 சதவீத வட்டி வழங்கப்பட உள்ளது. 24 மாதங்கள் முதல் 23 மாதங்கள் வரையிலான ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திற்கு 8.75 சதவீத வட்டி வழங்கப்பட உள்ளது. 36 மாதங்கள் முதல் 48 மாதங்கள் வரையிலான ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திற்கு 9.00 சதவீத வட்டி வழங்கப்பட உள்ளது.
ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தின் பழைய வட்டி விகிதங்கள்: 12 மாதம் முதல் 23 மாதங்கள் வரையிலான ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திற்கு 8.10 சதவீத வட்டி வழங்கப்பட்டது. 24 மாதங்கள் முதல் 23 மாதங்கள் வரையிலான ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திற்கு 8.40 சதவீத வட்டி வழங்கப்பட்டது. 36 மாதங்கள் முதல் 48 மாதங்கள் வரையிலான ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திற்கு 8.60 சதவீத வட்டி வழங்கப்பட்டது. தற்போது அந்நிறுவனம் அவற்றில் மாற்றம் செய்துள்ளது.
மேலும் இந்த RDகளில் விண்ணப்பிக்கும் பெண்களுக்கு, கூடுதலாக 0.10 சதவீத வட்டியும் வழங்கப்பட உள்ளது. மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீத கூடுதல் வட்டி கிடைக்கும். மாத தவணையாக ரூ. 1000 முதல் இந்த FDகளில் முதலீடு செய்யலாம். ஆனால் குறிப்பிட்ட சில FDகளுக்கு அந்நிறுவனத்தின் ஒன் ஆப் மற்றும் அதிகாரபூர்வ இணையதளங்களில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
More From GoodReturns

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications