சென்னை: சிறிய அளவிலான தொகையை முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு, தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு (National Savings Recurring Deposit Account - RD) ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் பணத்தை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முதலீடு செய்து சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்படாமல் உத்தரவாதமான வருமானத்தைப் பெற முடியும். இந்தத் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க யாரெல்லாம் தகுதி உடையவர்கள்? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு அல்லது தபால் அலுவலக RD என்பது போஸ்ட் ஆபீஸ்களில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். இதனைப் பயன்படுத்தி ஒருவர் தங்கள் கணக்குகளில் சிறிய தொகைகளை டெபாசிட் செய்ய முடியும். அதற்கு அவருக்கு வட்டியும் வழங்கப்படும். இந்த அஞ்சல் அலுவலக RD திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். தேவைப்பட்டால் நீங்கள் இதனை நீட்டித்துக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் மூலம் உங்களுக்கு கடன் வசதியும் வழங்கப்படுகிறது. ஒருவர் முன்கூட்டியே பணத்தை டெபாசிட் செய்யலாம் அல்லது முன்கூட்டியே கணக்கை மூடவும் செய்யலாம். RD திட்டம் 6.7 சதவீத வருடாந்திர வட்டியை வழங்குகிறது.

அஞ்சல் அலுவலக RD திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? 10 வயதுக்கு மேற்பட்ட மைனர்களாக இருந்தால், அவர்களுடைய பெயரில் கணக்கை தொடங்கலாம். 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் என்றால், அவர்களின் பெற்றோர்களின் பெயரில் கணக்கு தொடங்கப்படலாம். ஒருவர் ஒற்றை கணக்கை மட்டுமே வைத்திருக்க முடியும். கணக்கு திறக்கப்படும் நபர் மனநிலை சரியில்லாதவர் என்றால், அவருக்கு பதிலாக அவருடைய பாதுகாவலர் கணக்கைத் திறக்கலாம். இந்திய குடிமக்கள் அனைவரும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடாக ரூ. 100 ரூபாய் முதல் முதலீடு செய்ய முடியும். ஒரு மாதத்திற்கு உங்களுடைய டெபாசிட் தொகை செலுத்தப்படவில்லை என்றால், ரூ. 100 ரூபாய்க்கு ரூ. 1 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல ஒருவர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நேரத்தில், அடுத்த 5 ஆண்டுகளுக்கும் டெபாசிட் செய்யவிருக்கும் தொகையை முன் பணமாகவும் செலுத்தலாம்.
முதிர்ச்சியின் போது மாதம் ரூ. 5,000 ரூபாய் டெபாசிட் செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?: உங்கள் மாதாந்திர முதலீடு ரூ. 5,000 எனில், 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 300,000 முதலீடு செய்திருப்பீர்கள். 6.70 சதவீதம் என்ற விகிதத்தில், உங்களுக்கு ரூ. 56,830 வட்டி கிடைக்கும் மற்றும் முதிர்வுத் தொகை ரூ. 3,56,830 ஆக இருக்கும்.
முதிர்ச்சியின் போது மாதம் ரூ. 10,000 ரூபாய் டெபாசிட் செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?: உங்கள் மாதாந்திர முதலீடு ரூ. 10,000 எனில், 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 600,000 முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு வட்டியாக ரூ. 1,13,659 கிடைக்கும். முதிர்வின்போது ரூ. 7,13,659 ரூபாய் பெறுவீர்கள்.
முதிர்ச்சியின் போது மாதம் ரூ.15,000 ரூபாய் டெபாசிட் செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?: உங்கள் மாதாந்திர முதலீடு ரூ. 15,000 எனில், 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 900,000 முதலீடு செய்திருப்பீர்கள். அதற்கு நீங்கள் ரூ. 1,70,492 வட்டியைப் பெறுவீர்கள். மேலும் முதிர்வுத் தொகை ரூ. 10,70,492 ஆக இருக்கும்.
முதிர்ச்சியின் போது மாதம் ரூ. 20,000 ரூபாய் டெபாசிட் செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?: உங்கள் மாதாந்திர முதலீடு ரூ. 20,000 எனில், 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.12,00,000 முதலீடு செய்திருப்பீர்கள். உங்களுக்கு ரூ. 2,27,315 வட்டியும், முதிர்வுத் தொகை ரூ.14,27,315 ஆக இருக்கும்.
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!



Click it and Unblock the Notifications