சென்னை: பல கல்லூரி மாணவர்கள் தங்கள் கையில் பணம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெற்றோரும் தங்களுடைய குழந்தையை, எப்படியாவது ஒரு பட்டப்படிப்பை முடிக்க வைத்து விட வேண்டும் என்ற நோக்கில் கடன் வாங்கி கல்லூரிக்கு சேர்க்கின்றனர். ஆனால் அங்கு தேவைப்படும் சில செலவுகளை கூட தாமால் செய்து கொள்ள முடியாமல் சில கல்லூரி மாணவர்கள் சிரமப்படக்கூடும். அப்படி இருக்கும் கல்லூரி மாணவர்களுக்கு படித்துக் கொண்டே சம்பாதிப்பதற்கான சில வழிகளைப் பார்ப்போம்.
ஆன்லைன் டியூஷன்: நீங்கள் ஏதேனும் ஒரு பாடத்தை கற்பிப்பதில் சிறந்தவர் என்றால், அதை நீங்கள் மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கலாம். ஆன்லைனில் டியூஷன் எடுப்பதற்கு பல தளங்கள் உள்ளன. எளிதாக இதன் மூலம் உங்கள் சேவையை வழங்கலாம். பைஜூஸ், வேதாந்து போன்ற நிறுவனங்களும் இந்த முறைகளைப் பின்பற்றுகின்றன. மேலும், உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் உங்களுடைய அறிவையும் மேம்படுத்தலாம்.

பிளாக் எழுதுதல்: சிலருக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும். இது போன்ற திறன் கொண்ட நபர்களுக்கு பிளாக் எழுதுதல் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இதற்கு நிறைய இலவச தளங்கள் உள்ளன. அதில் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். அதன் மூலம் வருமானமும் பெறலாம். இதில் உங்களுக்கு பிடித்த தலைப்புகளை வைத்து சுவாரசியமான கதைகளை மக்களுக்கு புரியும் நோக்கில் வழங்குவதன் மூலம் உங்களுடைய வெப்சைட்டின் டிராஃபிக் கூடும். அதன் மூலம் ஒரு தொகையை நீங்கள் சம்பாதிக்க முடியும்.
டெலிவரி வேலைகள்: சில நேரங்களில் டெலிவரி வேலைகள் செய்து வருமானம் ஈட்டிக் கொண்டே படிக்கும் கல்லூரி மாணவர்களை நாம் பார்த்திருப்போம். ஸ்விக்கி, ஸோமேட்டோ போன்ற நிறுவனங்கள் பார்ட் டைம் ஆக கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகின்றன. அதேபோல நீங்கள் இ-காமர்ஸ் தளங்களிலும் டெலிவரி வேலையில் ஈடுபடலாம். ஸ்விக்கி, ஸோமேட்டோ போன்ற டெலிவரி சேவை வழங்குனர்கள் உங்கள் ஊரில் இல்லை என்றால், உங்கள் ஊரில் இருக்கும் பிற டெலிவரி வேலைகளில், நீங்கள் ஈடுபடலாம். கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு இருக்கும் நேரத்தை அதற்காக பயன்படுத்தலாம்.
யூடியூப் சேனல்: தற்போது ஃபுட் ரிவ்யூ சேனல்கள், பொது அறிவு சேனல்கள் போன்றவை மக்களிடம் அதிகம் பகிரப்படுகிறது. இதுபோன்ற திறமை உங்களிடமிருந்தால் நீங்கள் அதனை பயன்படுத்தி யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாம். இல்லையேல் டெக் சேனல்கள் கூட நடத்தலாம். உங்களுடைய சேனலை 4000 மணி நேரம் பார்த்து 1000 சப்ஸ்கிரைபர்களை, நீங்கள் வைத்திருந்தால், உங்களுக்கு யூடியூப்-இல் இருந்து வருமானம் வர ஆரம்பிக்கும்.
சரியான தரமான கேமரா இருந்தால் இந்த முயற்சியை நீங்கள் மேற்கொள்ளலாம். உங்களிடம் கேமரா இல்லை என்றாலும், உங்களுடைய நண்பர்கள் சிலரை கூட்டு சேர்த்துக் கொண்டு ஏதேனும் ஒரு புது விஷயத்தை பற்றி சிந்தித்து அதிலிருந்து தொடங்கலாம்.
ஆன்லைன் விற்பனை: சிலர் கைவினைப் பொருட்கள் செய்வதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். இது போன்ற நபர்கள் ஆன்லைனில் உங்களுடைய பொருட்களை மார்க்கெட்டிங் செய்யலாம்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications