போஸ்ட் ஆபீஸ்களில் நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் நிறைய சிறு சேமிப்பு திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதனால் பல பாமர மக்களும் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் தனி நபர்களுக்கு உதவக்கூடிய ஒரு திட்டம் தான் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட். இதனை தேசிய சேமிப்பு டைம் டெபாசிட் திட்டம் என்றும் கூறுவார்கள். இந்தப் பதிவில் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதத்தையும், பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதத்தையும் ஒப்பிட்டு.. எதில் சிறந்த லாபம்? கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
POTD திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்களுக்கு வழக்கமான வாடிக்கையாளர்களைக் காட்டிலும் அதிக வட்டி தரப்படுவதில்லை. அனைவருக்கும் இதன் வட்டி விகிதங்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

POTD திட்டத்திற்கான வட்டி ஆண்டுதோறும் செலுத்தப்படுகிறது. ஆனால் காலாண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. POTD கணக்கை உரிய விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் முன்கூட்டியே முடிக்க முடியும். அதாவது தேவையப்பட்டால் முதிர்வு காலத்திற்கு முன்னரே முடித்து கொள்ளலாம்.
POTD திட்டத்தின் முதிர்வு காலம்: இந்தத் திட்டத்திற்கு 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள் என வெவ்வேறு முதிர்வு காலங்கள் உள்ளன. அவற்றில் உங்களுக்கு ஏற்ற திட்டத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
POTD திட்டத்தின் சிறப்பம்சங்கள்: தபால் அலுவலக டைம் டெபாசிட் திட்டத்திற்கு குறைந்தபட்சம் 1,000 ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்புகள் எதுவும் இல்லை. மேலும் ஒரு தபால் நிலையத்திலிருந்து இன்னொரு தபால் நிலையத்திற்கு எளிதாக உங்களுடைய அக்கவுண்ட்டை மாற்றிக் கொள்ளலாம். நீங்கள் தனிநபராகவோ அல்லது கூட்டுக்கணக்காகவோ போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வட்டி விகிதங்கள்: 1 ஆண்டு முதிர்வு காலத்திற்கு 6.9 சதவீதமும், 2 ஆண்டுகள் முதிர்வு காலத்திற்கு 7 சதவீதமும், 3 ஆண்டு முதிர்வு காலத்திற்கு 7.1 சதவீதமும், 5 ஆண்டுகள் முதிர்வு காலத்திற்கு 7.5 சதவீத வட்டியும் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்திற்கு வழங்கப்படுகிறது.
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்கலாம்?: இந்தத் திட்டத்திற்கு இந்திய குடிமகனாக இருக்கும் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மைனராக இருந்தால் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில் கணக்கைத் திறக்கலாம். ஒருவர் தனிநபராகவோ அல்லது கூட்டுக் கணக்காகவோ கணக்கைத் திறக்கலாம்.
POTD திட்டத்தின் கீழ் தொகையைத் திரும்பப் பெறுதல்: 5 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட POTD திட்டத்தில் முதலீடு செய்து விட்டு, 4 ஆண்டுகளுக்குள் பணத்தை திரும்ப பெற நினைத்தால் 4% வட்டி வழங்கப்படும். முன்னதாக இதே போல் 5 ஆண்டு திட்டம், 4 ஆண்டுகளில் திரும்ப பெறப்பட்டால் 3 ஆண்டு POTD திட்டத்திற்கான வட்டி வழங்கப்பட்டது.
சரி தற்போது 5 ஆண்டுக்கு போஸ்ட் ஆபீஸ்களின் POTD திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தையும், 5 ஆண்டு பிக்சட் டெபாசிட்களுக்கு முன்னணி வங்கிகள் வழங்கும் FD திட்டத்திற்கான வட்டி விகிதத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்:
பொது வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதம்: 7.50%
மூத்தக் குடிமக்களுக்கான வட்டி விகிதம்: 7.50%
SBI பேங்க்:
பொது வாடிக்கையாளர்களுக்கான FD வட்டி விகிதம்: 7%
மூத்தக் குடிமக்களுக்கான FD வட்டி விகிதம்: 7.50%
HDFC பேங்க்:
பொது வாடிக்கையாளர்களுக்கான FD வட்டி விகிதம்: 7%
மூத்தக் குடிமக்களுக்கான FD வட்டி விகிதம்: 7.50%
ICICI பேங்க்:
பொது வாடிக்கையாளர்களுக்கான FD வட்டி விகிதம்: 7%
மூத்தக் குடிமக்களுக்கான FD வட்டி விகிதம்: 7.50%
கனரா பேங்க்:
பொது வாடிக்கையாளர்களுக்கான FD வட்டி விகிதம்: 6.70%
மூத்தக் குடிமக்களுக்கான FD வட்டி விகிதம்: 7.20%
IDFC பேங்க்:
பொது வாடிக்கையாளர்களுக்கான FD வட்டி விகிதம்: 7%
மூத்தக் குடிமக்களுக்கான FD வட்டி விகிதம்: 7.50%
PNB பேங்க்
பொது வாடிக்கையாளர்களுக்கான FD வட்டி விகிதம்: 6.50%
மூத்தக் குடிமக்களுக்கான FD வட்டி விகிதம்: 7.30%
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications