புதிதாக ஒரு தொழில் தொடங்க நினைக்கிறீர்களா? உங்களுக்கு எந்த வணிகம் சிறந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லையா? உங்களுக்காக ஒரு சிறந்த வணிக யோசனை நாங்கள் வழங்குகிறோம். இப்போது நகரங்கள் முதல் கிராமங்கள் வரை ஒவ்வொரு இடத்திலும் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. எனவே, விவசாயம் செய்வது உங்களுக்கு அதிக லாபத்தை தரும். முக்கியமாக எல்லா இடங்களிலும் தக்காளிக்கு அதிக தேவை உள்ளது, அதனால் தக்காளி சாகுபடி செய்வது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். தக்காளி விவசாயத்தை எப்படி தொடங்குவது என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
இந்தியாவில் தான் தக்காளி அதிக அளவில் பயிரிடப்படுகிறது. ஒரு ஹெக்டேர் நிலத்தில் 800 முதல் 1,200 குவிண்டால் தக்காளி வரை விளைவிக்க முடியும். பொதுவாக ஒரு வருடத்திற்கு இரண்டு முறை தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. முதல் சாகுபடி ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி அல்லது மார்ச் வரை நீடிக்கும்.

இரண்டாவது சாகுபடி நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தொடங்கி ஜூன் அல்லது ஜூலை வரை நீடிக்கும். தக்காளி சாகுபடியில் விதைகளிலிருந்து நாற்றுகள் தயாரிக்கப்படும். ஒரு மாதத்திற்குள், அந்த நாற்றுசெடிகள் வயலில் நடவு செய்ய ஏற்றதாக மாறிவிடும். ஒரு ஹெக்டேர் நிலத்தில் சுமார் 15,000 செடிகள் வரை நடலாம்.
சுமார் 2-3 மாதங்களுக்குப் பிறகு, வயலில் உள்ள செடிகளில் இருந்து தக்காளி வெளிவரத் தொடங்கும். தக்காளி விலையின் உயர்வால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் இந்த ஆண்டு லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். அதே சமயம் சந்தையில் தக்காளியின் நிலை எப்பொழுதும் அதிகமாக இருப்பதில்லை. தக்காளியை சராசரியாக ஒரு கிலோவிற்கு 10 ரூபாயாக விற்கப்பட்டால். நீங்கள் 1,000 குவிண்டாலுக்கு மேல் உற்பத்தி செய்வதன் மூலம் , 10 லட்சம் ரூபாய் வரை எளிதாக சம்பாதிக்கலாம்.
சில நேரங்களில், தக்காளியின் விளைச்சல் குறைந்து, தக்காளியின் தேவை அதிகரித்தால், அதன் விலையும் அதிகரிக்கும். அதுபோன்ற நேரங்களில் தான் இந்தியாவில் திடீரென தக்காளி விலையில் உயர்வு ஏற்படுகிறது. சில பகுதிகளில் தக்காளி விலை கிலோ 200 ரூபாய் வரையிலும் உயர்ந்த செய்திகளை நாம் அவ்வப்போது கேட்டிருப்போம்.
ஒரு மனிதனுக்கு உணவு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு உணவை தயார் செய்ய காய்கறிகளும் முக்கியம். காய்கறிகளின் தேவை எப்பொழுதும் குறையாது, எனவே விவசாயம் செய்வது ஒரு சிறந்த தொழில். விவசாயம் செய்பவர்கள் குறைந்து கொண்டு வருவதால் காய்கறிகளின் விளைச்சல் குறைகிறது. மேலும் விவசாயம் செய்வதற்கான போதிய இடமும் தற்போது குறைந்து வருகிறது. ஏனெனில் பல விவசாய இடங்களில் தற்போது பெரிய பெரிய அப்பார்ட்மென்ட்கள் வந்துவிட்டது.
உங்களிடம் தக்காளி செடியை வளர்ப்பதற்கு இடம் இருந்தால் போதுமானது. அதிலிருந்து நீங்கள் தக்காளி சாகுபடி செய்யலாம். இடமில்லாதவர்கள் தங்கள் வீட்டு மொட்டை மாடிகளில் கூட உங்களுக்கு பிடித்த காய்கறிகளை பயிரிட்டு அதன் மூலம் சம்பாதிக்கலாம். இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சோசியல் மீடியா தளங்களிலும் தற்போது பல பேர் எந்தவித உரமும் இல்லாமல், இயற்கை உரங்களை வைத்து காய்கறிகளை உருவாக்கி விற்பனை செய்து வருகின்றனர். இது போன்ற காய்கறிகளுக்கும் சந்தையில் அதிக தேவை இருக்கிறது.


Click it and Unblock the Notifications