இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி காரணமாக மக்கள் எப்படியாவது கூடுதல் பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள காரணத்தால் புதுப் புது ஐடியா உடன் சைட்பிஸ்னஸ் துவங்க ஆர்வமாக உள்ளனர்.
சினிமா நடிகர்கள் முதல் ஐடி ஊழியர்கள் வரையில் தங்களது கரியர் நிரந்தரமாக இல்லை என நினைக்கும் காரணத்தால் கூடுதல் வருமானம் அளிக்கும் சைட் பிஸ்னஸ் வைத்துக்கொள்ள அதிகளவில் விரும்புகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பார்க்கப்போகும் சைட் பிஸ்னஸ் அனைத்துத் தரப்பு மக்களும் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சைட்பிஸ்னஸ்
இந்தச் சைட்பிஸ்னஸ் துவங்க வெறும் 25000 ரூபாய் முதலீடு செய்தால் போது மாதத்திற்கு 3 லட்சம் ரூபாய்க்கு வரையிலான வருமானத்தை ஈட்ட முடியும். வியப்பாக உள்ளதா..? என்ன பிஸ்னஸ்..? எப்படி 3 லட்சம் வரையில் வருமானத்தை ஈட்ட முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்க.
முத்து வளர்ப்பு
முத்து வளர்ப்பின் நம்பமுடியாத லாபகரமான தொழிலாக உள்ளது. முத்து வளர்ப்பின் மூலம் பெரிய அளவில் வெற்றி அடைந்தவர்கள் ஏராளம். முத்துக்களுக்கு உலகம் முழுவதும் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் காரணத்தால் இந்த வணிகத்தில் ஒவ்வொரு மாதமும் நீங்க முதலீடு செய்த ஆயிரங்கள் லட்சங்களாக மாற்ற முடியும் எனக் கூறப்படுகிறது.
50 சதவீதம் வரை மானியங்கள்
முத்து வளர்ப்பின் முக்கிய அம்சம் என்னவென்றால், இதைத் தொடங்க அரசாங்கம் 50 சதவீதம் வரை மானியங்களை வழங்குகிறது என நியூஸ்18 தெரிவிக்கிறது. மத்திய அரசே இப்பிரிவு வர்த்தகத்தை ஆதரிக்கும் நிலையில் ஏன் முயற்சி செய்யக் கூடாது. முத்து வளர்ப்பு தொழிலை ஊக்குவிப்பதற்காக, மீன்வளத் துறை நீலப்புரட்சி உத்தியின் (Blue Revolution strategy) கீழ் முத்து வளர்ப்பை இணைத்துள்ளது.
நீலப் புரட்சித் திட்டம்
நீலப் புரட்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக மீன்வளத் துறையின் நிதி உதவி பெறும் மாநிலங்களில் முத்து சாகுபடிக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் வலியுறுத்தப்பட்டன. இதனால் முத்து வளர்ப்புக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
குளம்
முத்து வளர்ப்புக்குக் கட்டாயம் ஒரு குளம் தேவை, நீங்கள் அதை உங்கள் சொந்த பணத்திலும் கட்டலாம் அல்லது அரசாங்கத்தின் 50 சதவீத மானியத்தைப் பயன்படுத்திக் கட்டிக்கொள்ள முடியும்.
பயிற்சி திட்டம்
முத்து வளர்ப்பில் பயிற்சித் திட்டத்தை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றில் ஒருவர் தொழில்முறை பயிற்சி திட்டத்தில் சேரவும் அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் முத்து வளர்ப்பில் இருக்கும் முக்கியமான விஷயங்களை வல்லுனர்களிடம் இருந்து தெரிந்துகொள்ள முடியும். இதில் மிகவும் பிரபலமானது CIFA ஆகும்.
வளர்ப்பு முறை
முத்துக்களை வளர்க்க முதலில் மட்டிகளை வலையில் கட்டி, 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு குளத்தில் வைக்க வேண்டும். இதன் மூலம் மட்டிகள் சுற்றுச் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும், பின்னர்ச் சிப்பிக் குளத்தில் எடுக்கப்பட்டு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்படும். இதில் ஒவ்வொரு சிப்பியின் உள்ளேயும் ஒரு அச்சுச் சொருகப்படுகிறது. இந்த அச்சு தான் முத்தாக மாறும்.
25000 சிப்பிகள்
ஒரு ஏக்கர் குளத்தில் 25000 சிப்பிகள் வைக்க முடியும், இதன் மூலம் ஒரு ஏக்கர் குளம் மற்றும் சிப்பிகள் வைக்க 8 லட்சம் ரூபாய் வரையில் செலவாகும் எனச் சொல்லப்படுகிறது.
வருடத்திற்கு 30 - 35 லட்சம்
ஒரு சிப்பி 2 முத்துக்கள் வரையில் உருவாக்கும், சந்தையில் ஒரு முத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, முத்தின் தரம் மற்றும் அளவை பொருத்து 200 ரூபாய் வரையில் அதிகரிக்கும். உங்கள் குளத்தில் 50 சதவீதம் சிப்பிகள் நீங்கள் நினைத்தது படி செயல்பாட்டாலே வருடத்திற்கு 30 - 35 லட்சம் வரையில் சம்பாதிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
Disclaimer
Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications