ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் ஊதியம் கிடைத்தாலும் இந்தியாவில் குடும்பம் நடத்த போதவில்லை என ஒருவர் தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவருடைய வாழ்க்கை முறை மற்றும் அவர்கள் வசிக்கும் நகரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் அவர்களின் செலவினங்களும் அடங்கும். இந்த நிலையில் அண்மையில் எக்ஸ் பக்கத்தில் ஒருவர் வெளியிட்டிருந்த பதிவுதான் தற்போது பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

சவுரவ் தத்தா என்பவர் அவ்வப்போது முதலீடு சார்ந்த தகவல்களை பதிவு செய்து சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் . அவர் ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் ஊதியம் வாங்கினாலும் குடும்பத்தை நடத்துவதற்கு அது போதவில்லை என தெரிவித்துள்ளார்.
ஆண்டு சம்பளம் 25 லட்சம் ரூபாய் என்றால் மாதத்திற்கு அது 1.5 லட்சம் ரூபாய் என வருகிறது. மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு அத்தியாவசிய தேவைகளுக்காக மற்றும் வாடகை அல்லது இஎம்ஐ செலுத்துவதற்காகவும் ஒரு மாதத்திற்கு 1 லட்சம் ரூபாய் செலவாகி விடுகிறது.
25,000 ரூபாய் வெளியில் சென்று உணவு அருந்துவது திரைப்படங்களுக்கு செல்வது உள்ளிட்டவற்றுக்கு செலவிட பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 25 ஆயிரம் ரூபாய் மருத்துவ மற்றும் பிற அவசர செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் முதலீடு செய்வதற்கு எங்கே பணம் மீதம் இருக்கிறது என அவர் பதிவு செய்துள்ளார்.
அவருடைய இந்த பதிவு ஆயிரக்கணக்கானவர்களின் கவனத்தை பெற்றுள்ளது. ஒரு பயனர் எந்த கடனும் இல்லாமல் சரியான முறையில் திட்டமிட்டு செலவிடும் பழக்கத்திற்கு வந்தால் கூடிய விரைவில் நீங்கள் பெரிய பணக்காரராக முடியும் என பதிவு செய்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பயனாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவர் அடிக்கடி இப்படி சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிடுகிறார் என தெரிவித்துள்ளார் .
ஒவ்வொரு மாதமும் வெளியில் சென்று உணவருந்துவதற்கு மற்றும் ஓடிடி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்காக 25 ஆயிரம் செலவிட்டு விட்டு சேமிப்பதற்கு எதுவுமே இல்லை எனக் கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
மருத்துவ செலவுகளுக்காக மாதம்தோறும் 25 ஆயிரம் செலவு செய்கிறீர்களா இப்படி கூட இருக்கிறார்களா என ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார். உங்களுடைய தவறான கணக்கீடுகள் மூலம் மக்களுக்கு தவறாக வழி காட்டாதீர்கள் என அவர் கூறியுள்ளார்.
ஆண்டுக்கு 25 லட்சம் சம்பளம் கூட கிடைக்கிறதா என சில பயனர்கள் வினவுகின்றனர். நாம் எவ்வளவு சம்பளம் வாங்குகிறோம் என்பது முக்கியமல்ல அதனை எப்படி திட்டமிட்டு செலவு செய்கிறோம் என்பது தான் முக்கியம் என ஒரு பயனர் சுட்டிக்காட்டியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

HDFC பங்கினை வாங்க இது பொன்னான நேரமா? - பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையில் நிபுணர்கள் டிப்ஸ்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications