இந்தியாவில் நடுத்தரக் குடும்பமாக வாழ்வது பலருக்கு ஒரு நிலையான பொருளாதார அடித்தளத்தை அளித்தாலும், கூடவே சில தனித்துவமான சவால்களையும் கொண்டு வருகிறது. போதுமான வருமானம் இருந்தும், வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பல குடும்பங்களின் பிரதிபலிப்பாக, பெங்களூருவைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் தனது மனக் குமுறலை ரெடிட் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அவரது சிந்தனைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
அந்த இளைஞர் தனது பதிவில், நான் திருமணமானவன். என் மனைவியும் வேலைக்குச் செல்கிறாள். நாங்கள் ஒரு நடுத்தரக் குடும்பம். எங்கள் இருவரின் ஆண்டு வருமானம் சேர்த்து சுமார் ரூ. 60 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வருமானம் பலருக்கு ஒரு பெரிய தொகையாகத் தோன்றினாலும், குறிப்பாக பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வாழும் நடுத்தரக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார அழுத்தங்களை அவரது அடுத்தடுத்த வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.

தனது ஆண்டு வருமானம் ரூ.60 லட்சம் இருந்தும், வாழ்க்கைத் தரம், சாலைகள், போக்குவரத்து, பாதுகாப்பு, கல்வி, மருத்துவம் மற்றும் ஊழல் ஆகியவற்றால் மிகுந்த அவதியடைவதை ரெடிட் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். இந்தியா எப்போதாவது மாறுமா? இல்லையென்றால் இப்போதே வெளியேற வேண்டுமா? என்று அவர் எழுதிய அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி, மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அதேபோல், 3 கிலோமீட்டர் தூரம் செல்ல 40 நிமிடங்கள் ஆகிறது. சாலைகள் சீரழிந்து, தொடர்ந்து தோண்டப்பட்டு வருகின்றன. திட்டங்கள் தொடங்கினாலும் முடிவதில்லை. அதிகமான சாலை வரிகளை கட்டினாலும் எந்த நலனும் கிடைக்கவில்லை. நான் டெல்லியை விட ரூ.2.25 லட்சம் அதிகமாக சாலை வரி கட்டினேன். பதிலுக்கு என்ன கிடைக்கிறது? சேதமடைந்த சாலைகள், போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் நிரந்தர கட்டுமான வேலைகள் என்று கூறினார்.
மேலும் அவர் கூறும் வேதனை என்றால், நாங்கள் வருமானத்தின் 30-40% வரியாக செலுத்துகிறோம். ஆனால் இலவச மருத்துவம் இல்லை, நல்ல கல்வி இல்லை. குடி நீருக்கே தனியாக செலவிட வேண்டும். தனியார் பள்ளி, தனியார் மருத்துவமனை, தண்ணீர் டேங் எல்லாம் தனியாகக் கட்ட வேண்டும். இது நடுத்தர வர்க்கத்தை பசுவைப் போல பாலை உறிஞ்சுவது போலாக இருக்கிறது என்று கூறினார்.
அவர் இந்தியாவின் தற்போதைய நிலையை கனடா, ஜெர்மனி போன்ற வெளிநாடுகளுடன் ஒப்பிட்டு, அங்கேயும் அதிக வரி இருந்தாலும் தரமான பொது சேவைகள் வழங்கப்படுகின்றன என்று கூறினார். இங்கு வாழ்க்கை சீராக இல்லை. தூசி, இரைச்சல், மன அழுத்தம் எங்கு பார்த்தாலும் அமைதி இல்லை. இரவு 7 மணிக்கு பிறகு என் மனைவியை தனியாக வெளியே அனுப்பவே பயமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் அவர் தனக்கு ஒரு திருமண சான்றிதழ் பெற அதிகாரிக்கு ரூ.2,000 லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் கூறினார். லஞ்சம் கொடுக்காமல் சென்றால், அலுவலகத்துக்கு திரும்பத் திரும்ப ஓட வேண்டியது தான் என்றார்.
அவர் ஏற்கனவே கேட்ட ஒரு கேள்வி: எல்லாம் மிகவும் விலை உயர்ந்துவிட்டது. வீட்டு வாடகை 10% உயர்ந்துள்ளது. பள்ளிக் கட்டணங்கள் அதிகம், வேலைக்காரர்களும் சம்பள உயர்வு கேட்கிறார்கள் அதில் குறை இல்லை. ஆனால் வருமானம் அதைவிட மெதுவாக வளர்கிறது.
இவ்வாறு கூறியபோதும், அவர் இந்தியாவை விட்டு செல்ல விரும்பவில்லை. ஆனால் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் வாழ்வது முற்றிலும் பாசாங்குத்தனமா என்று அவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறார். மாற்றம் எப்படி வரும்? நாங்கள் செலுத்தும் வரிக்கு ஏதாவது நலன்கள் கிடைக்குமா? நம் குடும்பங்களுக்கான பாதுகாப்பு உண்டா? என்று அவர் கேட்கிறார்.
இந்த பதிவுக்குப் பலரும் பதிலளித்தனர். இந்தியா எப்போதும் மாறப்போவதில்லை. வெளியேறுங்கள் என்ற கருத்துகள் பல இருந்தன. சிலர் நாங்கள் வெளிநாட்டுக்குப் போய்விட்டோம், வாழ்க்கை நன்றாகவே உள்ளது என்றனர். மேலும், ஒருவர் இது இன்னும் மோசமாகும். பிறகு தான் சிறிது சிறிதாக மாறும். அதற்கும் 20-30 ஆண்டுகள் ஆகலாம்.
அது போல, ஜெர்மனிக்கு மாறிய ஒருவர் கூறுகையில், இந்திய குடும்பங்கள், கலாசாரம் என நினைவுகள் வருவதை தவிர, எனக்கு வருத்தமில்லை. இங்கே நான் என் வாழ்க்கையை நன்றாக வாழ்கிறேன். வெளிநாட்டில் உங்கள் சுற்றத்தை உருவாக்குங்கள் நிம்மதியாக வாழலாம்." என்று கூறினார். இந்த இளைஞரின் பதிவு இந்திய நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் குறித்த உண்மையான வலியை பிரதிபலிக்கிறது. இது போன்ற சமூகப் பதிவுகள் எதிர்கால இந்திய வளர்ச்சிக்கான சிந்தனையைத் தூண்டுகிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications