2 ஆண்டுகளில் முதன் முறையாக வருவாய் கணிப்பை குறைத்த நிபுணர்கள்..!

மும்பை:இந்திய நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக நிறுவனங்களின் லாபத்தினை ஆய்வாளர்கள் குறைத்து வருவதை பார்க்கின்றன.

இது சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைகளுக்கு மத்தியில், தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், இது மேற்கொண்டு வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது வருவாயினை தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

ப்ளும்பெர்க் அறிக்கையின் மதிப்பீடுகளின் படி, என்.எஸ்.இ 500 நிறுவனங்களில் 52% கடந்த ஒரு மாதத்தில், வருவாய் சரிவினைக் கண்டுள்ளன. அடுத்த மூன்று காலாண்டுகளில் ஆய்வாளர்கள் மதிப்பீடுகளை குறைக்க வாய்ப்புள்ளது.

கமாடிட்டி சார்ந்த துறைகள்

கமாடிட்டி சார்ந்த துறைகள்

பெரும்பாலும் இவ்வாறு மதிப்பீடு குறைக்கப்பட்ட நிறுவனங்களில் உலோகங்கள், சிமெண்ட் மற்றும், எனர்ஜி போன்ற கமாடிட்டி சார்ந்த துறைகளில் வருவாய் குறைப்புகள் என்பது அடங்கும் எனலாம்.

இதே கிராமப்புற இந்தியாவில் தொடர்ந்து வரும் பலவீனம் காரணமாக, நுகர்வோரின் மத்தியில் தேவை சரியலாம். இதன் காரணமாக நுகர்வு என்பது சரிவினைக் காணலாம்.

அப்கிரேட் செய்யப்பட்டவை

அப்கிரேட் செய்யப்பட்டவை

இதன் காரணமாக கிராமப்புற பொருளாதாரத்தினை பெரிதும் சார்ந்துள்ள நுகர்வோர் நிறுவனங்களின் வருவாய் என்பதும் குறையலாம்.

எனினும் வங்கிகள், நிதித்துறை மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் என பலவும் (upgrade) மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் வருவாய் குறையலாம்

மேலும் வருவாய் குறையலாம்

தொடர்ச்சியாக கடந்த 8 காலாண்டுகளுக்கு பிறகு நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சிகளை குறைப்பது என்பது அதிகரித்துள்ளது.

ஷேர்கானின் கேப்பிட்டல் மார்கெட்டின் தலைவர் கெளரவ் துவா, முன்னோக்கி செல்லும்போது, நுகர்வோர் செலவினம் என்பது பணவீக்கம் காரணமாக சரிவில் காணப்படுகின்றது. இந்த நிலையில் பணவீக்கம் என்பது மேலும் அதிகரித்து, சர்வதேச பொருளாதாரம் என்பது மேலும் மோசமடைந்தால் மேலும் நிறுவனங்களின் வருவாய் என்பது சரிவதற்கான வாய்ப்பு எனலாம்.

நிஃப்டி 50ல் என்னென்ன நிறுவனங்கள்?

நிஃப்டி 50ல் என்னென்ன நிறுவனங்கள்?

நிஃப்டி 50ல் பிபிசிஎல், டாடா ஸ்டீல், டிவிஸ் லேபாரட்டீஸ், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஹிண்டால்கோ, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட 23 நிறுவனங்கள் தரம் இறக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதே மஹிந்திரா & மஹிந்திரா, பிரிட்டானியா, டாக்டர் ரெட்டீஸ் லெபாரடீஸ், பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் ஆட்டோ, யுபிஎல் மற்றும் ஐடிசி உள்ளிட்ட 19 நிறுவனங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இரு இலக்கில் வளர்ச்சி

இரு இலக்கில் வளர்ச்சி

லார்ஜ் கேப் நிறுவனங்களின் வருவாய் இரட்டை இலக்கில் வளர்ச்சி கண்டுள்ளன. எனினும் சில மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களின் வருவாய் ஆனது சரிவினைக் கண்டுள்ளது. இது பல நிறுவனங்களின் பங்கு விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.

டிசம்பர் காலாண்டு நிலவரம்

டிசம்பர் காலாண்டு நிலவரம்

கடந்த டிசம்பர் 2022ம் ஆண்டில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் என்பது குறைவதற்கான தெளிவான அறிகுறிகள் என்பது காணப்படுகின்றன. அடுத்து வரும் காலாண்டுகளில் வருவாய் விகிதம் சரியலாம் என்றாலும், மதிப்பீட்டினை குறைக்கவில்லை.

இவ்வளவு சரிவா?

இவ்வளவு சரிவா?

பிரமல் பார்மா, இந்தியன் ஆயில், ஆதித்யா பிர்லா பேஷன், பிபிசிஎல், பிஎஸ்இ, பிர்லா கார்ப், சுதர்சன் கெமிக்கல்ஸ், நய்கா போன்ற பல நிறுவனங்களின் வருவாய் விகிதம் என்பது கடந்த ஒரு மாதத்தில் 40 - 60% எனும் அளவுக்கு குறைந்துள்ளது.

இதனையும் கவனியுங்க?

இதனையும் கவனியுங்க?

மூலப் பொருட்கள் விலை மற்றும் எரிபொருட்கள் விலை என தளர்த்தப்படுவதால், அடுத்த இரண்டு காலாண்டுகளில், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் நிறுவனங்களின் மார்ஜின் விகிதம் என்பது சற்றே மேன்மடையலாம். எனினும் ஏற்றுமதியானது குறைந்து வரும் நிலையில், இதுவும் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். மொத்தத்தில் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கம் என்பது இந்திய சந்தையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக நிறுவனங்களின் வளர்ச்சியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+