விரும்பிய பொருளை வாங்கியே ஆக வேண்டும் என்று விடாப்பிடியாக இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிலும் காஸ்ட்லியான கார்களை எப்படியாவது வாங்க வேண்டும் என்று நினைத்து அதன்படியே வாங்கி முடிப்பவர்களும் உள்ளனர்.
அப்படியொரு இளைஞரின் 19 ஆண்டுகால கனவு, ஒரு லம்பார்கினி காரை சொந்தமாக்க வேண்டும் என்பது. தனது கனவுக் காரை அந்த இளைஞர் வாங்கியே விட்டார். அந்த இளைஞரின் பெயர் ரிகான்ட் பிட்டி. ஈஸ்மைடிரிப் நிறுவனத்தின் இணை உரிமையாளர். ஈஸ்மைடிரிப் நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது பெரிய ஆன்லைன் டிராவல் கம்பெனி.

ரிகான்ட் பிட்டி தனது 16 ஆவது வயதில் தனது சகோதரர்கள் நிஷாந்த் பிட்டி (மணிகார்னிகா: தி குயின் ஆப் ஜான்ஸி, மதாரி ஆகிய படங்களின் இணை தயாரிப்பாளர்), பிரசாந்த் பிட்டி ஆகியோருடன் சேர்ந்த 2008இல் ஈஸ்மைடிரிப் கம்பெனியை நிறுவினார். கம்பெனி ஆரம்பித்ததில் இருந்தே நல்ல லாபம் வரத் தொடங்கியதால் பிட்டி சகோதரர்களின் உழைப்புக்கு ஏற்ற லாபம் பெருகியது.
2021 ஆம் ஆண்டு மார்ச்சில் ஈஸ்மைடிரிப் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பரில் அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்களாகி ஒரு யுனிகார்ன் நிறுவனமாக உருவெடுத்தது.
ரிகான்ட் பிட்டி லின்கிடுஇன்-ல் பகிர்ந்த ஒரு பதிவில் இந்தியாவின் முதல் லம்போர்கினி உருஸ் பெர்பார்மன்டே காரை வைத்திருப்பதாகக் கூறியுள்ளார். இந்தக் காரின் நிறம் வெர்டி வைப்பர்(ஸ்பெஷல் கிரீன்) அந்த லம்போர்கினி காரை அவர் 2023 செப்டம்பர் 24 ஆம் தேதியன்று வாங்கியுள்ளார். அந்த சொகுசு எஸ்யூவியின் விலை ரூ.4.22 கோடியாகும்.
காருடன் அவர் எடுத்துக் கொண்ட படத்தையும் ரிகான்ட் பிட்டி பகிர்ந்துள்ளார்.
இந்தக் காரை வாங்குவது எனது 19 ஆண்டுகால கனவாகும். 2021 ஆம் ஆண்டில் அந்தக் காரை வாங்கியிருக்க முடியும். ஆனால் கோவிட் 19 பாதிப்பு உலகம் முழுவதும் பரவியிருந்ததால் வாங்க முடியவில்லை.
அதற்கு பதிலாக நான் ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்களை பல என்ஜிஓக்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக அளித்தேன். ஆனால் காத்திருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பியப் பொருள் கட்டாயம் கிடைக்கும்.
பின்னர் எனது கனவு காரான லம்போர்கினி உருஸ் பெர்பார்மன்டேவை வாங்கினேன். உண்மையிலேயே இது இந்தியாவில் வாங்கப்பட்ட முதல் கார். இது ஒரு பேன்ஸி கார் கதையல்ல. விடாப்பிடியாகவும் கடின உழைப்பாலும் என் கனவை நனவாக்கிய செயலாகும் என்றார்.
பல இந்திய பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் லம்போர்கினி உருஸ் காப்ஸ்யூல் கார் மீது விருப்பம் கொண்டுள்ளனர் அந்தப் பட்டியலில் கோடீஸ்வரர்களான முகேஷ் அம்பானி, அதார் பூனவாலா, ரண்வீர் சிங், ஜூனியர் என்டிஆர், ரஜினிகாந்த், கார்த்திக் ஆர்யன், ரோஹித் ஷெட்டி ஆகியோரும் அடங்குவர். லம்போர்கினி உருஸ் காப்ஸ்யூல் காரின் விலை ரூ.3 கோடிக்கு அதிகமாகும்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications