டிரம்ப்-ன் அதிரடியான வரிகளுக்கு பின்பு பிரிக்ஸ் நாட்டு தலைவர்கள் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக ஆலோசனை செய்து வருகின்றனர். இதற்கிடையில் இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி SCO மாநாட்டிற்காக சீனா செல்ல உள்ளார். இந்த பயணத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ சந்திக்க உள்ளார் பிரதமர் மோடி.
இதேவேளையில் பல முக்கிய காரணங்களுக்காக இந்திய அரசு சீன நிறுவனங்களுக்கு விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தி வருவது மூலம் இந்த சந்திப்பு மிகவும் சிறப்பானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - அமெரிக்கா மத்தியிலான வர்த்தக பிரச்சனைகளில், சீனா இந்தியாவுக்கு ஆதரவமாக பேசி வரும் இதேவேளையில் டிரம்ப் நிர்வாகம் சீனா மீதான வரி விதிப்புக்கு தயாராகி வருகிறது. இதனால் இந்த SCO மாநாடு இந்தியா - சீனா மத்தியிலான நடப்புறவில் புதிய பாதையை வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவும் சீனாவும் இடையேயான உறவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், இந்திய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கும் சீன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சிகளுக்கு மத்திய அரசு அடுத்தடுத்து அனுமதி அளிக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மத்திய அரசு தனது கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தி அனுமதிகளை எளிதாக்கும் வகையில் வழிமுறைகளை மாற்றும் என தொழில்துறை வட்டாரங்கள் மற்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். எப்படி எம்ஜி மோட்டார்ஸ் விஷயத்தில் JSW குழுமம் மற்றும் சீனாவின் SAIC மத்தியிலான பங்கு விற்பனைக்கு அனுமதி அளித்ததோ அதேபோல் தற்போது எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறைக்கு வழிவகை செய்யப்பட உள்ளது.
இந்திய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கும், சீன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியிலான கூட்டு முயற்சிகள் அதிகமாக தற்போது PCB, டிஸ்ப்ளே மாடியூல், கேமரா துணை அமைப்புகள் மற்றும் பேட்டரிகள் போன்ற பிரிவுகளில் நடக்கிறது. இந்த கூட்டணி முயற்சிகள் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கு மிகவும் அவசியமானவை என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியா - சீனா எல்லையில் இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மோதிக் கொண்டதை அடுத்து, மத்திய அரசு 2020 ஆம் ஆண்டு அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் திருத்தம் செய்தது. இந்த திருத்தம் படி, இந்தியா தனது நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளிலிருந்து வரும் முதலீடுகளுக்கு அரசு அனுமதி கட்டாயமாக்கப்பட்டது
இதன் காரணமாக, இந்திய பல வருடங்களாக சீன முதலீடுகளுக்கு தடை விதித்து வந்தது. ஆனால் இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறை வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் சீனா நிறுவனங்கள் அவசியம் என்ற நிலை வந்துள்ளது.
இதனால் பல எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள், சீன நிறுவனங்கள் உடனான கூட்டணி, சீன நிறுவனங்களின் தொழில்நுட்ப பகிர்வு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஒப்பந்தங்களை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.
இந்திய அரசு பொறுத்தவரையில், சீன முதலீடுகள் மற்றும் கூட்டணி முயற்சிகளில் தொழில்நுட்ப பகிர்வை முக்கியமானதாக வலியுறுத்துகிறது. இந்த நிலையில் மத்திய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்தியாவின் உற்பத்தி இலக்குகளுக்கும், புதிய திட்டத்தின் வெற்றிக்கும் சில சீன முதலீடுகள் அத்தியாவசியமானவை எனக் கருதுகிறது.
நிதி ஆயோக், சீன நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களில் 24 சதவீதம் வரை பங்குகளை வாங்க அனுமதிக்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது, இது விதிமீறல்களைத் உருவாக்காத வகையில் அமையும் எனவும் தெரிவித்துள்ளது.
உலகளாவிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் சுமார் 60 சதவீதத்துக்கும் மேல் சீனாவைச் சார்ந்துள்ளது. இந்த நிலையில் உலகில் எந்தொரு நாடாக இருந்தாலும் உள்நாட்டு உற்பத்தி திறன்களை உருவாக்க வேண்டும் என்றால் சீனாவை புறக்கணிக்க முடியாது என மூத்த அரசு அதிகாரி ஒருவர் மனிகண்ரோல் பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றம் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இடையேயான சமீபத்திய பேச்சுக்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது முக்கியமானதாக கருதப்படுகிறது.
டிக்சன் டெக்னாலஜிஸ் மற்றும் பகவதி (மைக்ரோமேக்ஸ்) போன்ற முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் ஏற்கனவே சீன நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தங்களை செய்து இது மத்திய அரசு அனுமதிக்காகக் காத்திருக்கின்றன.
டிக்சன் சமீபத்தில் லாங்சீர் உடனான கூட்டு முயற்சிக்கு அனுமதி பெற்றுள்ளது, இதில் டிக்சன் 74 சதவீத பங்குகளையும், சீன கூட்டாளி 26 சதவீதத்தையும் வைத்துள்ளது. மேலும், ஹெச்கெசி, சோங்கிங் யூஹை பிரிசிஷன் மேனுபேக்சரிங் மற்றும் விவோ மொபைல் இந்தியா உடனான கூட்டு முயற்சிகளுக்கு அனுமதியை டிக்சன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
டிக்சன் டெக்னாலஜிஸ் மற்றும் பகவதி (மைக்ரோமேக்ஸ்) நிறுவனங்களுக்கான ஒப்புதல் மோடியின் சீன பயணத்தின் போது கிடைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

மோடியின் திடீர் அவசர CCS கூட்டம்.. எதற்காக ஞாயிற்றுக்கிழமை மீட்டிங்..? என்ன நடந்தது..?!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!



Click it and Unblock the Notifications