நம் நாட்டில் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி அளவுக்கு தின்பண்டங்கள் விற்பனை நடைபெறுகிறது. எந்தவொரு உணவு பொருளையும் விற்பனைக்கு கொண்டு வந்தாலும் அது காலியாகி விடும். எனவே தின்பண்டங்கள் சந்தையில் பெரிய வர்த்தக வாய்ப்புகள் குவிந்து கிடக்கிறது.
இந்த சந்தையில் குறைந்த முதலீட்டில் உங்களுக்கு நல்ல லாபம் தரும் ஒரு தொழில் குறித்து தகவல் சொல்லப்போறோம். இல்லத்தரசிகள் கூட இந்த தொழிலை தொடங்கலாம் என்பது இதன் சிறப்பு. மேலும் இந்த தின்பண்டத்தை சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்தியாவில் நன்கு விரும்பப்படும் பாரம்பரிய இனிப்பு தின்பண்டமான கஜக் தயாரிப்பு தொழில்தான் குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தொழிலாக உள்ளது. நம்ம ஊருல கடலை மிட்டாய், எள் மிட்டாயை தான் வடக்கே கஜக் என்று சொல்கிறார்கள்.
வறுத்த நிலக்கடலை / எள் மற்றும் வெல்லம் ஆகியவைதான் இந்த தொழிலுக்கு முக்கிய மூலப்பொருள். இந்த இனிப்பு பொருள் ஊட்டச்சத்து நிறைந்தது. இந்த இனிப்பு பொருட்களை வழக்கமான பராம்பரிய முறையில் தயாரிக்கலாம்.
மேலும் நவீன எந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்தியும் எள்ளு மிட்டாய் அல்லது எள்ளு உருண்டை எளிதாக தயாரிக்கலாம். இந்த தொழிலை தொடங்குவதற்கு வங்கி கடனும் எளிதாக கிடைக்கும்.
தொழில் தொடங்குவதற்காக பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின்கீழ் வங்கிகளில் நீங்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். இந்த கடனை பெற எந்த பிணையமும் தேவையில்லை என்பதால், எந்த பிரச்சினையும் இல்லாமல் உங்களுக்கு நிதியுதவி (கடன்) வழங்கப்படும்.
காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் (கே.வி.ஐ.சி.) அறிக்கையின்படி, இந்த தொழில் தொடங்க 2,000 முதல் 2,500 சதுர அடி மொத்த பரப்பளவு தேவைப்படும். இடம் வாடகைக்கு கிடைக்கும் என ஆணையம் எதிர்பார்க்கிறது. இது தவிர, ஆலை மற்றும் எந்திரங்கள் தேவைப்படும். கூடுதலாக தொழிலை தொடங்க தொழிலாளர்கள் மற்றும் இதர சொத்துக்கள் தேவைப்படும்.
கே.வி.ஐ.சி. மதிப்பீட்டின்படி, எள்ளு மிட்டாய் அல்லது எள்ளு உருண்டை தின்பண்டங்கள் தொழில் தொடங்க சுமார் ரூ.22.37 லட்சம் தேவைப்படும். உங்க சொந்த பணம் ரூ.5.59 லட்சத்தை மூலதனமாக போடுங்க. ரூ.11.78 லட்சம் கடன் வாங்கி முதலீடு செய்யலாம். இது தவிர ஒர்க்கிங் கேபிடலாக ரூ.5 லட்சம் தேவைப்படும்.
புதிய பிராண்டின் கீழ் உங்கள் தயாரிப்பை அறிமுகப்படுத்தி, அதன் தயாரிப்பில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் நீங்கள் சந்தையை கைப்பற்றலாம். உங்கள் தயாரிப்பை உள்நாட்டில் சந்தை உள்ளூர் விநியோகஸ்தர்களை தொடர்பு கொள்ளுங்க. மேலும் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளிலிருந்து உங்கள் தயாரிப்புக்கு ஆர்டர் பெறலாம்.
திட்டமிட்டப்படி, நீங்கள் இந்த தயாரிப்பில் இறங்கினால் உங்களது ஆண்டு விற்பனை வருவாய் ரூ.86.13 லட்சமாக இருக்கும். கே.வி.ஐ.சி.யின் இந்த வணிகம் குறித்த ஐந்தாண்டு திட்ட லாப அறிக்கையின்படி, முதல் ஆண்டில் உங்களுக்கு நிகர லாபமாக ரூ.2.31 லட்சம் கிடைக்கும்.
இரண்டாவது ஆண்டில் நிகர லாபம் ரூ.5 லட்சமாகவும், மூன்றவாது ஆண்டில் ரூ.7.47 லட்சமாகவும், நான்காவது ஆண்டில் ரூ.10.79 லட்சமாகவும், ஐந்தாவது ஆண்டில் ரூ.14.18 லட்சமாகவும் இருக்கும். எனவே குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் கஜக் தின்பண்ட தொழிலை நம்பிக்கையோடு தொடங்கி வெற்றி பெறலாம்.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?



Click it and Unblock the Notifications