சென்னை: வீடு கட்டுவது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதனை சரிவர பராமரிப்பது. ஏனெனில் நீங்கள் கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை பராமரிக்காமல் விட்டால் காலப்போக்கில் பெரிய செலவுகளை இழுத்து விட்டு விடும். ஆதலால் உங்கள் கட்டிடத்தில் பிரச்சினை சிறியதாக இருக்கும் போதே, பார்த்து விடுங்கள். ஆனால் யாருக்கும் பழுது பார்க்க வேண்டாம் என்ற எண்ணமெல்லாம் இருக்காது. பண பிரச்சனையே அவர்களின் சாக்குப் போக்குக்கு காரணமாக இருக்கும். இது போன்ற பிரச்சினை உள்ளவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உங்கள் வீட்டை புதுப்பிக்க, நீங்கள் எந்த வழிகளில் பணம் பெற முடியும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்
ஒரு வீட்டை கட்டி விட்டாலே, அதனை திறம்பட பராமரிக்க வேண்டும் என்ற கவலை ஓனர்களுக்கு வந்துவிடுகிறது. சிலர் வாடகைக்கு வீடுகளைக் கட்டி விட்டிருப்பர். அவர்களும் சரிவர பராமரிக்க வேண்டும். இல்லையேல், காலப்போக்கில் நீங்கள் அதிக தொகையை பராமரிப்பிற்காக செலவிட வேண்டி இருக்கும்.

வீட்டை புதுப்பித்தல் என்பது ஏற்கனவே குடியிருக்கும் வீட்டை மேம்படுத்துதல் அல்லது தேவையான மாற்றங்கள் செய்வதைக் குறிக்கிறது. இந்த மாற்றங்களில் பெயிண்ட் அடிப்பது, நீர் கசியும் சுவரை சரி செய்வது, சுவரில் ஏற்பட்ட விரிசலை பூசுவது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவ்வாறு வீடுகளைப் புதுப்பிக்க இருக்கும் உரிமையாளர்களுக்கு நிறைய நிதி விருப்பங்கள் இருக்கின்றன.
லோன் பெறலாம்: பல வங்கிகள் வீட்டைப் புதுப்பிப்பதற்காகவே பிரத்தியேகமான லோன்களை வழங்குகின்றன. மேலும், பல வங்கிகள் இதற்கான சிறப்பு வட்டி விகிதங்களையும் தருகிறது. லோன் எடுப்பதற்கு முன்பு மற்ற வங்கிகளுடன் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்த்து லோன் பெறலாம். இதன் மூலம் நீங்கள் உங்கள் வீட்டை புதுப்பிப்பதற்கான பொருட்கள், வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான கூலி மற்றும் ஒப்பந்தக்காரருக்கான கட்டணம் போன்றவற்றை எளிதாக செலுத்தலாம்.
தனிநபர் கடன்: பர்சனல் லோன் என்று சொல்லப்படுகிற தனிநபர் கடன்களை பெற்று உங்கள் வீட்டைப் புதுப்பிக்கலாம். பர்சனல் லோன் பெறுவது மற்ற லோன்களை விட மிகவும் சுலபமானது. இதற்கு அதிக ஆவணங்கள் ஒன்றும் தேவைப்படாது. அதுவும் பல வங்கிகள் போட்டி போட்டு வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக குறைந்த வட்டியில் பர்சனல் லோன்களை வழங்குகிறது. அவற்றை வைத்து நீங்கள் புதுப்பிக்கும் செலவுகளைப் பார்த்துக் கொள்ளலாம்.
உங்கள் சொத்துக்கள் மீதான கடன்: நீங்கள் வைத்திருக்கும் வீடு, உங்கள் சொந்த சொத்து என்றால் அதனை வைத்து நீங்கள் கடன் பெற முடியும். சொத்துக்களை வைத்து பெரும் கடன்களுக்கு அதிக தொகை கிடைக்கிறது. இருப்பினும், நீங்கள் கடன் பெற்ற தொகையை திருப்பி வட்டியுடன் செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்து, உங்கள் தேவை என்ன என்பதை ஆராய்ச்சி செய்த பிறகு லோன் பெறவும்.


Click it and Unblock the Notifications