இன்று மாத சம்பளத்தில் பணியாற்றும் அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசை என்றால் அது சொந்த தொழில் துவங்க வேண்டும் என்பதாகத் தான் இருக்கும். குறிப்பாகப் பெரு நகரங்களில் பணியாற்றுவோருக்கு இந்த எண்ணம் சற்று அதிகமாகவே இருக்கும், ஆனால் சொந்த தொழில் துவங்குவதற்கு அதிகப்படியான நிதி தேவையும் உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் பணம் சேர்த்த பின்பு தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் உங்களுக்குத் தான் இந்த ஐடியா.
மகேஷ் திட்டம்
மகேஷ் என்பவரை உதாரணமாக எடுத்துக்கொள்வோம், இவர் 25 வயதில் பெங்களூரில் மாதம் 65,000 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு உடனடியாகத் தொழில் துவங்க வேண்டும் என்ற திட்டம் இல்லை என்றாலும் 45 வயதுக்கு மேல் கட்டாயம் பெங்களூரிலோ அல்லது சொந்த ஊரிலோ பெரிய அளவில் பிஸ்னஸ் துவங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
20 வருடம் காலம்
மகேஷ்-க்குத் தொழில் துவங்க சுமார் 20 வருடம் காலம் உள்ளது, இக்காலகட்டத்தில் நிலையாக முதலீடு செய்தாலே தொழில் துவங்குவதற்கான பணத்தை உருவாக்க முடியும். ஆனால் எந்தத் திட்டத்தில், எப்படி, எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்ற குழப்பம் நம்மைப் போலவே மகேஷ்-க்கும் உண்டு.
5 கோடி ரூபாய்
20 வருட காலத்தில் மகேஷ் திட்டமிட்டு இருக்கும் 5 கோடி ரூபாய் தொகையைத் தனது 45 வயதில் உருவாக்க எஸ்ஐபி திட்டம் மிகவும் சரியானதாக இருக்கும். பொதுவாகப் பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்யப் பயப்படுபவர்கள் எஸ்ஐபி திட்டத்தின் மூலம் ஆபத்துகளைக் குறைத்து முதலீடு செய்ய முடியும்.
ஏன் எஸ்ஐபி
ஏன் எஸ்ஐபி..? என்ற கேள்விக்குப் பதில் இதுதான். மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கடந்த 25 வருடத்தில் சராசரியாக 15 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது, ஆனால் அடுத்த 20 வருடத்திற்கு இதேபோன்ற வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. காரணம் ரீடைல் பணவீக்கம் கடந்த 25 வருடத்தில் 8-10 சதவீதமாக இருந்தது தற்போது 5-6 சதவீதமாக உள்ளது.
பங்குச்சந்தை முதலீடு
இதனால் அடுத்த 20-30 வருடத்திற்குப் பங்குச்சந்தை முதலீட்டில் 11 முதல் 12 சதவீதம் வளர்ச்சியைக் கட்டாயம் பெற முடியும். மேலும் இந்தியப் பொருளாதாரமும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பங்குச்சந்தையும் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. இதனால் குறித்த காலகட்டத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட 5 கோடி ரூபாய் தொகையைப் பெற முடியும்.
ஈக்விட்டி மியூச்சவல் பண்ட்
சரி ஈக்விட்டி மியூச்சவல் பண்ட் முதலீட்டில் 12 சதவீத லாபத்துடன் மாதம் 50,543 ரூபாய் முதலீடு செய்தால் 25 வயதுடைய மகேஷ் 45 வயதில் கட்டாயம் 5 கோடி ரூபாய் அளவிலான தொகையைப் பெற முடியும். ஆனால் மகேஷின் 65000 ரூபாய் சம்பளத்தில் இது கட்டாயம் செய்ய முடியாது. ஆனால் இதைச் சாத்தியப்படுத்த ஒரு வழி உண்டு.
சிறிய டிரிக்
எஸ்ஐபி திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட சதவீத தொகையைக் கூடுதலாக முதலீடு செய்யும் போது கட்டாயம் 5 கோடி ரூபாய் என்ற இலக்கை எளிதாக எட்ட முடியும். இது எப்படிச் சாத்தியப்படுத்த முடியும் என்பதையும் இப்போது பார்ப்போம்.
12 சதவீத லாபம்
எஸ்ஐபி முதலீட்டில் இருந்து கிடைக்கும் 12 சதவீத லாபத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை, 25 வயதுடைய மகேஷ் மாதம் 26,725 ரூபாய் முதலீட்டுடன் துவங்கி, ஒவ்வொரு வருடமும் 10 சதவீதம் அதிகரித்துக் கூடுதலான முதலீட்டை செய்யும் போது கட்டாயம் 5 கோடி ரூபாய் பெற முடியும்.
குடும்பச் செலவுகள்
மாதம் 50,543 ரூபாய் முதலீட்டை 26,725 ரூபாய் முதலீடாகக் குறைத்து வருடமும் 10 சதவீதம் உயர்த்துவதன் மூலம் குடும்பச் செலவுகளையும் எளிதாகச் சமாளிக்க முடியும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications