இந்தியாவில் வேலை செய்பவர்கள் பலரும் PF / EPF கணக்கில் பணம் சேர்த்து வருகிறார்கள். இது வேலை முடிவு அல்லது அவசர தேவைக்காக பணத்தை சேமிக்கும் ஒரு பாதுகாப்பு திட்டம் ஆகும். ஆனால், இதை திரும்ப பெறும் செயல்முறை மிகவும் சிக்கலாகவும், நேரம் மிகவும் செலவாகும் பணியாகவும் இருந்தது. இதை எளிதாக்கும் வகையில் ஊதியத் திட்ட நிறுவனமான EPFO (Employees' Provident Fund Organisation) சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
இப்போது பிஎஃப் பணத்தை திரும்ப பெறுவதற்கான நடைமுறையை EPFO மிக எளிமையாக மாற்றி அமைத்துள்ளது. ஆதார் ஓடிபி மூலம் வங்கி கணக்கு சரிபார்ப்பு, முதலாளியின் ஒப்புதல் தேவையில்லை என்பது இந்த புதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள் ஆகும்.

புதிய மாற்றத்தின் முக்கிய அம்சங்கள்:பணியாளர்கள் பிஎஃப் (PF) தொகையை திரும்ப பெறும் செயல்முறை தற்போது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த சில கடுமையான நிபந்தனைகளை EPFO தற்போது நீக்கியுள்ளது. புதிய மாற்றத்தின் மூலம் பிஎஃப் பணத்தை பெறுவதற்காக வங்கிக் கணக்கை ஆதார் எண்ணுடன் இணைத்து, அதை ஓடிபி (OTP) மூலம் சரிபார்த்தாலே போதும். இதற்காக தற்போது வரை கேட்டு வரப்பட்ட பாஸ் புக் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலைகள் (Cancelled Cheque) பதிவேற்றம் செய்வது தேவையில்லை.
மேலும், முன்னர் பிஎஃப் தொகையை பெறும்போது முதலாளியின் ஒப்புதல் கட்டாயமாக இருந்தது. ஆனால் இந்த புதிய முறையில் அந்த கட்டாயமும் நீக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் நேரடி பிஎஃப் பரிமாற்றம் விரைவாக நடக்கும். இதற்கு முக்கியமாக யுஏஎன் (UAN - Universal Account Number) மற்றும் வங்கி கணக்கு இணைப்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் பணி நிதி தொகையை எளிதாகவும் விரைவாகவும் பணியாளர்கள் திரும்ப பெற முடியும்.
இந்த புதிய திட்டத்தால் இந்தியா முழுவதும் 75 மில்லியன் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் நேரடி பயனடைய உள்ளனர். இதன் மூலம் அவர்களது பிஎஃப் தொகையை விரைவாகவும், சிக்கலின்றியும் பெற முடியும். இந்த புதிய முறை மிகவும் எளிதாகவும் பயனுள்ளதாகவும் செயல்படுகிறது. முதலில் பிஎஃப் உறுப்பினர் தனது யுஏஎன் (UAN) எண்ணுடன் தன்னுடைய வங்கிக் கணக்கை இணைத்திருக்க வேண்டும். அதே நேரத்தில், அந்த வங்கி விவரங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதன் மூலம் வங்கியின் பாஸ் புக் அல்லது காசோலை தேவைப்படாது. ஆன்லைன் மூலம் வங்கியின் தரவுகளை ஆதாருடன் இணைத்த பிறகு, ஓடிபி (OTP) மூலம் வங்கி கணக்கு சரிபார்ப்பு செய்யப்படுகிறது. இந்த ஒடிபி சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்ததும், EPFO அமைப்பு நேரடியாக அந்த வங்கிக் கணக்கில் பிஎஃப் பணத்தை செலுத்தும். இந்த முழு செயல்முறை மிக வேகமாக நடைபெறுவதால், பணி நிதி தொகை மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் உறுப்பினரின் வங்கிக் கணக்கில் வரத் தொடங்கும். இதனால் பிஎஃப் பணம் பெறும் வேலை வாய்ப்பாளர்களுக்கு அதிக வசதியாகி உள்ளது.
EPFO நிறுவனம் தற்போது தானாகவே (Auto Settlement) கிளைம்(Claim) தீர்வுகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரூ.5 லட்சம் வரை பிஎஃப் தொகையை எந்த சிக்கலும் இன்றி மூன்று அல்லது நான்கு நாட்களில் பெற முடியும்.
இதற்கு மத்திய அறங்காவலர் குழுவின்(Central Board of Trustees) ஒப்புதல் கிடைத்துள்ளது. EPFO தற்போது இந்த புதிய நடைமுறையை பரவலாக அமல்படுத்தி வருகிறது. இந்த புதிய முறை சோதனைப்படுத்தப்பட்டு 10 மாதங்கள் முடிந்த நிலையில் தற்போது வெற்றிகரமாக செயல்படுகிறது. 70 மில்லியனுக்கும் அதிகமான EPFO உறுப்பினர்கள் இதற்காக தயாராக உள்ளனர்.
இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படுவதன் மூலம் பிஎஃப் உறுப்பினர்களுக்கு பல்வேறு வகையான நன்மைகள் கிடைக்கப் போகின்றன. முக்கியமாக, பிஎஃப் தொகையை திரும்ப பெறும் கிளைம் தீர்வுகளில் ஏற்பட்டு வரும் தாமதம் இந்நிலையில் பெரிதும் குறையும். இதனால் உறுப்பினர்களின் முக்கியமான நேரமும் தேவையில்லாத செலவுகளும் மிச்சம்மாகும்.
மேலும், இந்த புதிய முறை முழுவதும் இணையதள சேவை (Online service) முறைகளில் அடிப்படையாக செயல்படும் என்பதால், நிர்வாக செயல்பாடுகள் தெளிவாகவும் சீராகவும் அமையும். இதனால் தொழிலாளர்களுக்கு EPFO அமைப்பின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். அவர்கள் எந்த இடத்திலிருந்தும் தங்களின் பிஎஃப் தொகையை எளிதாகவும் விரைவாகவும் பெற முடியும் என்பதனால் இத்திட்டம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த முறை செயல்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் பிஎஃப் பணம் திரும்ப பெறும் நடைமுறை ஒரு தொலைபேசி அழைப்போ, ஒரு இணைய விண்ணப்பமோ போதும் என்ற நிலைமை உருவாகும். இந்திய தொழிலாளர்களின் நலனுக்காக இது ஒரு முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications