இரவில் தர்பூசணி சாப்பிடுவது உயிருக்கே ஆபத்தா? மும்பை சம்பவத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிரியாணி மற்றும் தர்பூசணியை அடுத்தடுத்து உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பய்தூனி என்ற பகுதியில் அப்துல்லா டோகாடியா என்பவர் வசித்து வந்தார். இவர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சனிக்கிழமை இரவு 10:30 மணியளவில் பிரியாணி சாப்பிட்டுள்ளார். உறவினர்கள் அவர்கள் வீட்டுக்கு சென்றுவிட்ட நிலையில், அப்துல்லா டோகாடியா அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நள்ளிரவு 1:00 மணியளவில் தர்பூசணி பழத்தைச் சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது. இவர்களுக்கு அதிகாலை 5:30 மணியளவில் வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இவர்கள் நால்வருமே உயிரிழந்துவிட்டனர்.

இரவில் தர்பூசணி சாப்பிடுவது உயிருக்கே ஆபத்தா? மும்பை சம்பவத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

பிரியாணி உண்டு அதன் பின் தர்பூசணி சாப்பிட்டு இவர்கள் இறந்தது பல கேள்விகளை எழுப்புகிறது. இவர்களோடு பிரியாணி சாப்பிட்ட மற்ற உறவினர்கள் நலமாக உள்ளனர். இதனால் தர்பூசணியில் தான் பிரச்சினையோ என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் தர்பூசணி இதற்கு காரணமில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவர்கள் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த அறிக்கை வந்த பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இரவு நேரத்தில் தர்பூசணி பழம் சாப்பிடுவது பாதுகாப்பில்லையா உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி பலராலும் முன் வைக்கப்படுகிறது. இந்தியாவில் கோடைகாலங்களில் உடலில் நீர் சத்து குறையாமல் இருப்பதற்காக ஏராளமாக மக்கள் விருப்பத்துடன் வாங்கி உண்ணக்கூடிய ஒரு பழம்தான் தர்பூசணி. இயற்கையாகவே இனிப்பு சுவையும் அதிக நீர் சத்தும் கொண்டது என்பதால் குழந்தைகளுக்கு விருப்பமான ஒரு பழமாக இருக்கிறது.

Also Read

தர்பூசணியில் 94 சதவீத நீர்ச்சத்து இருக்கிறது எனக் கூறும் புகழ்பெற்ற ஊட்டச்சத்து நிபுணரான சில்பா அரோரா பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் உணவு ஜீரணம் ஆவதற்கு பெரிய அளவில் இது உதவியாக இருக்கும் என கூறுகிறார். என்டிடிவிக்கு பேட்டி அளித்துள்ள அவர், இரவு ஏழு மணிக்கு மேல் தர்பூசணி போன்ற பழங்களை உட்கொள்வதை தவிர்க்கலாம் என்கிறார்.
தர்பூசணியில் லேசான அமிலத்தன்மை இருப்பதால் உடல் செயல்பாடு குறைவாக இருக்கக்கூடிய இரவு நேரங்களில் அது நம் உடலில் செரிமானத்தை இன்னும் மெதுவானதாக மாற்றும் என பேட்டியில் தெரிவித்திருக்கிறார். ஆனால் அது இறப்பு வரை கொண்டு செல்லாது என்கிறார்.

Recommended For You

தர்பூசணி பழத்தை இரவில் உண்பதால் உயிருக்கே ஆபத்து என சொல்ல முடியாது. ஆனால் மக்கள் இரவு உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும் என்கீறார். செரிமாண பிரச்சினை இருப்பவர்கள் , இரவு உணவில் கவனம் செலுத்த அறிவுரை வழங்குகிறார். இதற்கிடையே இந்த குடும்பத்தினர் சிகிச்சை பெற்ற சர் ஜே.ஜே. மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் சஞ்சய் சுரசே, உணவு நஞ்சாக இருந்திருந்தால், மருத்துவ அறிகுறிகள் மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கும். மேலும் இத்தனை வேகமாக அது உடல்நிலை மோசமடைதலுக்கு வழிவகுக்காது என்கிறார்.இவர்கள் நால்வருக்கும் உடல்நிலை மோசமடைந்த வேகம் ஒரு வழக்கமான உணவு நஞ்சு என்ற தியரியுடன் ஒத்துப்போகவில்லை. வேறு ஏதேனும் நச்சு அல்லது இரசாயனப் பொருளால் இது ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதா என ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+