அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஈபே ஈகாமர்ஸ் நிறுவனம் மேக்ரோ எக்னாமிக் பிரச்சனை காரணம் காட்டி 500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் 2023 ஆம் ஆண்டுத் துவக்கத்தில் 18000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து பல முன்னணி டெக் நிறுவனங்கள் அடுத்தடுத்து பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
ஜூம் நிறுவனத்தின் பணிநீக்கத்தைத் தொடர்ந்து ஈபே அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈபே
உலகின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான ஈபே உலகளவிலான தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 4 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக இந்நிறுவனத்தின் சிஇஓ அறிவித்துள்ளார்.
சிஇஓ ஜேமி ஐனோன்
செவ்வாய்க்கிழமை மாலை ஈபே நிறுவனத்தின் சிஇஓ-வான ஜேமி ஐனோன் அமெரிக்கப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிற்குச் சமர்ப்பித்த அறிக்கையில் மேக்ரோஎக்னாமிக் கண்டிஷன் காரணமாக நிறுவனத்தில் இருந்து 500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பணிநீக்கம்
மேலும் அந்த அறிக்கையில் ஜேமி ஐனோன் நிறுவனத்தை வலிமையாக்கவும், வாடிக்கையாளர்களுக்கான சேவையை மேம்பட்ட முறையில் அளிக்க வேண்டும் என்பதற்காக முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
500 ஊழியர்களைப் பணிநீக்கம்
தற்போது 500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளது மூலம் முக்கியமான இடத்தில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிலும் முக்கியமாகப் புதிய தொழில்நுட்பம் , வாடிக்கையாளர் சேவை, முக்கிய வர்த்தகச் சந்தை விரிவாக்கம் ஆகியவற்றில் முதலீடு செய்து ஒட்டுமொத்த மேக்ரோ, ஈகாமர்ஸ், தொழில்நுட்ப துறையில் ஏற்படப்போகும் மாற்றத்தை ஈடு செய்ய முடியு என நம்புகிறது.
ரெசிஷன் அச்சம்
இந்த அறிவிப்பு வெளியானது மூலம் ஈபே பங்குகள் சுமார் 1 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. ரெசிஷன் அச்சம் காரணமாகக் கடந்த சில மாதங்களாக டெக் நிறுவனங்கள் அடுத்தடுத்துப் பணிநீக்கம் செய்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் அமெரிக்க மத்திய வங்கியின் தொடர் வட்டி விகித உயர்வு தான்.
ZOOM நிறுவனம்
லாக்டவுன் காலத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் முக்கியச் சேவையாகப் பயன்படுத்தி வந்த ZOOM நிறுவனத்தில் இன்று சுமார் 1300 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக தனது நிறுவனத்தின் பிளாக் போஸ்ட்டில் அறிவித்துள்ளது.
Zoom பணிநீக்கம்
இது மட்டும் அல்லாமல் அடுத்த 30 நிமிடத்தில் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தங்களது பர்சனல் ஈமெயிலில் அறிவிப்பை பெறுவார்கள் எனத் தெரிவித்தார். இது டெக் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஈபே அடுத்தப் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டது.


Click it and Unblock the Notifications