இந்தியாவில் பேமெண்ட்ஸ் மற்றும் பணம் செலுத்தும் சேவைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனம் எபிக்ஸ் கேஷ். இந்நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த எபிக்ஸ் நிறுவனத்தின் நேரடி துணை நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
அதாவது எபிக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் எபிக்ஸ் சிங்கப்பூர், இந்த நிறுவனத்தின் 100 சதவீத துணை நிறுவனம் தான் எபிக்ஸ் கேஷ். அமெரிக்காவில் நாஸ்டாக் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள எபிக்ஸ் நிறுவனத்தின் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் இந்திய வம்சாவளி அமெரிக்க தொழிலதிபரான ராபின் ரெய்னா.

இந்த அமெரிக்க நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து வந்துள்ளது. இந்த சூழ்நிலையில், கடனை திருப்பி செலுத்த முடியாததால், வடக்கு டெக்சாஸ் நீதிமன்றத்தில் திவால் நிலைக்கு எபிக்ஸ் நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது.
எபிக்ஸ் நிறுவனம் அமெரிக்க வங்கிகளிடம் இருந்து வாங்கிய 60 கோடி டாலர் கடனுக்கான நிலுவை தொகையை திருப்ப செலுத்த தவறியதை தொடர்ந்து நீதிமன்றத்தில் திவால் நிலைக்கு தாக்கல் செய்துள்ளது. முன்னதாக கடந்த நவம்பரில், கடன் வசதியை நீட்டிப்பதற்காக அமெரிக்க வங்கிகளுடன் எபிக்ஸ் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தில் எபிக்ஸ் சிங்கப்பூா் நிறுவனமும் உத்தரவாதம் அளித்து இருந்தது. இதனால் எபிக்ஸ் நிறுவனத்தின் திவால் நடவடிக்கையில் எபிக்ஸ் சிங்கப்பூர் நிறுவனமும் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எபிக்ஸ் சிங்கப்பூர் நிறுவனம் திவால் நடவடிக்கையில் சிக்கினால் அதன் இந்திய நிறுவனமான எபிக்ஸ் கேஷ் நிறுவனத்தின் வர்த்தகத்தில் எந்த அளவுக்கு பாதிக்கும் அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் என சரியாக தெரியவில்லை.
2017ல் எபிக்ஸ் நிறுவனம் உள்நாட்டு பணம் அனுப்பும் நிறுவனமான இட்ஸ்கேஷ் நிறுவனத்தை கையகப்படுத்துதல் வாயிலாக இந்திய சந்தையில் களம் கண்டது. அது முதல் 2020 வரை எபிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் பல நிறுவனங்களை கையகப்படுத்துதல் மூலம் தனது வர்த்தக தளத்தை விரிவுப்படுத்தியது. 2022ல் எபிக்ஸ் கேஷ் நிறுவனம் ஐ.பி.ஓ.வில் களமிறங்கி நிதி திரட்ட முயற்சிகள் மேற்கொண்டது. பங்குச் சந்தை அமைப்பிடம் அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தது.
இருப்பினும் எபிக்ஸ் கேஷ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ. முயற்சிகள் வீழ்ச்சி அடைந்தன. எபிக்ஸ் கேஷ் பல விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்பதை கண்டுபிடித்த பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி அந்நிறுவனத்தை கண்டித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் நிறுவனத்தை கையகப்படுத்திய நிகழ்வுகளிலும் எபிக்ஸ் கேஷ் சர்ச்சையை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications