2020-ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கத்திலிருந்தே இன்னும் பலர் மீளவில்லை. ஊரடங்கு போடப்பட்டு தினசரி வேலைகள் பாதிக்கப்பட்டதோடு ஒரு சிலர் அன்றாட சாப்பாட்டுக்கே மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர். அனால் அதற்கு அடுத்தபடியாக தற்போது எபோலா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசு அதற்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எபோலா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்திருந்தால் உடனே உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று செவ்வாய்க்கிழமை அன்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒரு நல்ல விஷயமும் இருக்கிறது. தற்போது வரை இந்தியாவில் யாருக்கும் எபோலா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. எனவே செய்திகளை கண்டு யாரும் பீதியடையத் தேவையில்லை. சமீபத்தில் காங்கோவில் இருந்து வந்த ஒரு பயணிக்கு எபோலா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனால் அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடந்தது. ஆனால் இறுதியில் அவருக்கும் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது.
எனவே இந்தியர்கள் யாரும் பீதியடைய வேண்டாம். வதந்திகளை நம்பாமல் சுகாதாரத் துறை வழங்கும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் நம்பும் படி அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஒருவேளை நீங்கள் எபோலா பாதிப்பு அதிகமிருக்கும் பகுதிகளுக்கு பயணம் செய்திருந்து, இந்த வைரஸின் அறிகுறிகள் தென்பட்டால், உடனே உங்களை 21 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவியுங்கள். எபோலா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் பயப்படாமல் மத்திய அரசின் உதவி எண்ணிற்கு டயல் செய்யலாம். இதற்காக அரசு ஒரு இலவச உதவி எண்ணை அறிவித்துள்ளது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ? அல்லது எபோலா அறிகுறிகள் தென்பட்டாலோ? உடனே 1075 என்ற எண்ணுக்கு டயல் செய்து தெரிந்து கொள்ளலாம்.
கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது முன்னெச்சரிக்கையாக லாக்டவுன் போடப்பட்டது. அதேபோல தற்போது எபோலா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் மத்திய அரசு ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக காங்கோ, உகாண்டா மற்றும் சவுத் சூடான் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எபோலா வைரஸ் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் இதை பப்ளிக் ஹெல்த் எமர்ஜென்சியாக அறிவித்தது. இதற்கு முக்கிய காரணம் எபோலா வைரஸ் தொற்றால் 200க்கும் மேற்பட்டோர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர். 1,000-த்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு இருக்கலாம் எனவும் சந்தேகக்கப்படுகிறது.
ஆனால் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு ரிப்போர்ட்டை சமீபத்தில் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்டது. எபோலா தோற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட காங்கோவின் கிழக்கு மாகாணத்தில் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால் பூட்டப்பட்டிருந்த விமான நிலையங்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதுவும் ஒரு நல்ல அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
எபோலா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று வந்தவர்கள் தங்களுக்கு தானே சுய கட்டுப்பாடுடன் இருந்தாலே.. இந்த நோய் மட்டுமல்ல வேறு எந்த பரவக்கூடிய நோய் வந்தாலும் இந்திய எல்லைக்குள் வருவதற்கு முன்பே விரட்டி அடித்து விடலாம். நோய் பரவல் குறையும் வரை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்யாமல் இருப்பது இன்னும் சிறப்பு.


Click it and Unblock the Notifications