இந்திய ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கைக் குழுவின் (MPC) இரு நாள் கூட்டம் ஜூன் 5 முதல் 6 ஆம் தேதிகளில் நடைபெற்று ஜூன் 7 தேதி இக்கூட்டத்தின் முடிவுகளை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட உள்ளார்.
இந்திய மக்கள் வட்டி விகித குறைப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில், அமெரிக்க மத்திய வங்கிக்கு முன்பே ஐரோப்பிய மத்திய வங்கி 5 ஆண்டுகளுக்குப் பின்பு தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தைக் குறைந்துள்ளது.

சர்வதேச மத்திய வங்கிகள் நீண்ட காலமாகப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடுமையான நாணய கொள்கையை அமலாக்கம் செய்துள்ள வேளையில், தற்போது பொருளாதார வளர்ச்சி மற்றும் நுகர்வின் அளவை அதிகரிக்கும் பொருட்டு கடன் பெறுவதற்கான செலவைக் குறைப்பதை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் முதல் சிக்சர்-ஐ, ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) இன்று (ஜூன் 6) அடித்துள்ளது.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கிக்கு முன்னதாகவே ஐரோப்பிய மத்திய வங்கி, தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது. இதன் மூலம், 2022 அக்டோபரில் உயர்த்தப்பட்ட 4% என்ற வரலாற்று உச்ச வட்டி விகிதத்தில் இருந்து 3.75% ஆக வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டி விகிதக் குறைப்பு, வீட்டுக் கடன் வாங்குபவர்கள், சேமிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் என பலதரப்பட்ட மக்களை பல வகையில் குறறிப்படத்தக்க அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு இந்த வட்டி விகித குறைப்பு சாதகமானது, அதுவே சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு பெரும் இழப்பு.
விலைவாசி உயர்வு குறைந்து வருவதாகவும், பணவீக்க எதிர்பார்ப்புகள் அனைத்து நிலைகளிலும் குறைந்து வருவதாகவும் ஐரோப்பிய மத்திய வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே கடன் வழங்குவதை அதிகரிக்க வட்டி விகிதத்தைத் தளர்த்தி உள்ளது.
இருப்பினும், பணவீக்கம் கட்டுக்குள் வந்துவிட்டதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் 5 வருடத்திற்குப் பின்பு முதல் முறையாகக் குறைக்கப்பட்டு உள்ள இந்த 0.25% வட்டி விகித குறைப்பு பணவீக்கம் முழுமையாகக் கட்டுக்குள் வந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் விரைவான வட்டி விகிதக் குறைப்புக்கள் இருக்க வாய்ப்பில்லை. மேலும் ஐரோப்பிய மத்திய வங்கியை வைத்து அமெரிக்க மத்தி. வங்கி சோதனை செய்ய உள்ளது.
ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே மற்றும் பிற அதிகாரிகள், 26 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக் குழு ஜெர்மனி, Frankfurt நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைமையகத்தில் கூடி ஆலோசனை செய்து வட்டி விகித குறைப்பை அறிவித்துள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications