இந்திய தேர்தல் ஆணையம் (ECI) புதிய வாக்காளர்களுக்கு, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை (EPIC) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட 15 நாளில் வழங்கும் புதிய விரைவு விநியோகத் திட்டத்தை ஜூன் 18 அன்று தொடங்கியது.
இதேபோல் வாக்காளர் அட்டையில் முகவரி மாற்றம் உள்ளிட்ட இதர விவரங்களைப் மாற்ற விரும்பும் வாக்காளர்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், முன்பு 30 முதல் 45 நாள்கள் ஆன விநியோக நேரம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வாக்காளர் அடையாள அட்டை விநியோகம் என்பது விண்ணப்பம் கொடுத்து பதிவு செய்து அதன் பிறகு பல்வேறு கட்ட பிராசஸ் செய்யப்பட வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் ஒருவர் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பம் செய்தால் 30 முதல் 45 நாள்கள் வரை ஆகும்.
இந்த செயல் முறையால் மக்கள் மிகுந்த தாமதத்துடன் இச்சேவையை பெற்று வந்தனர். தற்போது இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ள இப்புதிய திட்டம் தொழில்நுட்ப அடிப்படையிலான சேவையாக அறிமுகப்படுத்தி, பெரும்பாலான பணிகள் இணையம் வாயிலாகவே செய்யப்படும் காரணத்தால் வாக்காளர் அட்டைக்கான காத்திருப்பு கால அளவை பாதியாகக் குறைத்துள்ளது.
இந்த திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம், இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் வாக்களர் அட்டைகளை துல்லியமாகவும் விரைவாகவும் வாக்காளர்களுக்கு வழங்க முடியும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் சேவைகளை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது. ECINet தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய IT சேவை, வாக்காளர் பதிவு அதிகாரி (ERO) முதல் அஞ்சல் விநியோகம் வரை ஒரு ஒருங்கிணைந்த செயல்முறையை உருவாக்கியுள்ளது. "இந்தத் திட்டம் வாக்காளர்களுக்கு விரைவான மற்றும் நம்பகமான சேவையை உறுதி செய்கிறது," என்று மாநில தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விரைவு விநியோகத் திட்டம் இந்தியாவின் தேர்தல் செயல்முறையை மேலும் சிறப்பாக்கும். புதிய வாக்காளர்கள், குறிப்பாக இளைஞர்கள், விரைவாக அடையாள அட்டை பெறுவதால், தேர்தலில் பங்கேற்க ஊக்கமளிக்கப்படுவர். மேலும், விவரப் புதுப்பிப்பு எளிமையாக்கப்பட்டதால், வாக்காளர் பட்டியலின் துல்லியம் உயரும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications