ஓரே இலக்கு.. ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மத்தியில் போர்..!

இந்தியாவில் ஏற்பட்டுள்ள மந்தமான பொருளாதார சூழ்நிலை, கொரோனா பாதிப்பு, வேலைவாயப்பு போன்றவற்றின் காரணமாக இந்திய மக்கள் மத்தியில் பொருட்களை வாங்கும் பழக்கம் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 6 மாத காலத்தில் மட்டும் இந்திய மக்கள் எப்போதும் இல்லாத வகையில் அதிகளவில் ஆன்லைன் ஷாப்பிங் செய்துள்ளனர், இது கொரோனா காரணமாக. அதேவேளையில் ஈகாமர்ஸ் தளத்தில் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் வந்தலும், மக்கள் பொருட்களை வாங்கும் விலை மதிப்பு பெரிய அளவில் குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.

அதாவது மக்கள் விலை குறைவான பொருட்களை அதிகளவில் வாங்கப்படுவது வழக்கமாக மாறியுள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தொய்வு மற்றும் வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் மக்கள் கையில் இருக்கும் பணத்தின் அளவு குறைந்துள்ளதை காட்டுகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய போர் வெடித்துள்ளது.

ஈகாமர்ஸ் நிறுவனங்கள்

ஈகாமர்ஸ் நிறுவனங்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட், மிந்திரா, அமேசான், ரிலையன்ஸ் ரீடைல் ஆகிய நிறுவனங்கள் மத்தியில் பேஷன் துறை சார்ந்த வர்த்தகத்தில் போர் நிலவி வருகிறது.

கொரோனா காரணமாக பண்டிகை காலம் என்றாலும் மக்கள் வெளியில் சென்று ஷாப்பி செய்வதை தவிர்த்து வரும் காரணத்தால் மக்களுக்கு தற்போது ஈகாமர்ஸ் நிறுவனங்கள் தான் ஷாப்பிங்-ன் ஒற்றை இலக்காக உள்ளது.

 

கூட்டணி

கூட்டணி

தீபாவளி வர்த்தகத்திற்காக ஈகாமர்ஸ் நிறுவனங்கள் தற்போது புதிய பொருட்களை பட்டியலிட வேண்டும் என்பதற்காக ஆப்லைன் வர்த்தகர்களுடன் கூட்டணி சேர்ந்தும், முதலீடு செய்தும் பல்வேறு புதிய பேஷன் பொருட்களை தனது ஈகாமர்ஸ் தளத்தில் சேர்க்க உள்ளனர்.

கடந்த சில வாரங்களாக அனைத்து ஈகாமர்ஸ் நிறுவனங்கள் பேஷன் மற்றும் ஆடை பிரிவில் பொருட்களின் எண்ணிக்கையை இரட்டிப்பு செய்துள்ளனர்.

 

50 மில்லியன் வாடிக்கையாளர்கள்

50 மில்லியன் வாடிக்கையாளர்கள்

இந்த ஆண்டு மட்டும் ஆன்லைன் ஷாப்பிங் சந்தையில் புதிதாக 50 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைய உள்ளதாக ஆய்வுகள் கூறப்படும் நிலையில், இப்புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் முன்ஏற்பாடு செய்து வருகிறது.

வளர்ச்சி

வளர்ச்சி

சமீபத்தில் பிளிப்கார்ட்-ன் பிக் பில்லியன் டே தள்ளுபடி விற்பனையில் 1.6 கோடி பொருட்களை சுமார் 40,000 பிராண்ட்களில் விற்பனை செய்துள்ளது. இந்த தள்ளுபடி விற்பனையில் எப்போதும் இல்லாத வகையில் நாட்டின் 2ஆம் தர நகரங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 51 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதேபோன்ற வளர்ச்சி அமேசான் தளத்திலும் ஏற்பட்டுள்ளது.

 

தீபாவளி

தீபாவளி

தீபாவளி பண்டிகையின் போது முக்கிய வர்த்தக பொருளாக இருப்பது புத்தாடை மற்றும பட்டாசுகள் தான். பட்டாசுகளை ஈகாரமஸ் நிறுவனங்கள் இன்னும் விற்பனை செய்ய தளத்தையும் அதற்கான அனுமதியும் பெறாத காரணத்தால் அடைகளை முக்கிய இலக்கா கொண்டுள்ளது ஈகாமர்ஸ் நிறுவனங்கள்.

எனவே தான் தீபாவளி பண்டிகைக்கு அனைத்து ஈகாமர்ஸ் நிறுவனங்களும் ஆடை மற்றும் பேஷன் பொருட்களை முக்கிய வர்த்தக இலக்காக கொண்டு செயல்படுகிறது. யார் அதிக வாடிக்கையாளர்களை பெறப்போகிறார்கள் என்பதில் மிகப்பெபிய போர் நிலவுகிறது என்று சொன்னாலும் மிகையாகாது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+