மோடி அரசு எடுக்கப்போகும் முக்கிய 'வரி' முடிவு.. பயமுறுத்தும் 2023.. ரெசிஷன் வருகிறதா..?

உலகம் முழுவதும் 2023 ஆம் ஆண்டில் மோசமான பொருளாதார நிலையை எதிர்கொள்ளும் என்ற கணிப்பு பெரும்பாலான வர்த்தகம், முதலீடு, நிதியியல் அமைப்புகள் கூறிவரும் நிலையில் உலக நாடுகள் இதை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.

இதில் முக்கியமாக ஐரோப்பா எதிர்கொள்ள உள்ள சரிவு எடுத்த சில வருடங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், இது சர்வதேச பொருளாதாரத்தில் பெரிய ஓட்டையை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இந்தியா மிகவும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

பொருளாதார மந்தநிலை

பொருளாதார மந்தநிலை

2023ல் பொருளாதார மந்தநிலை உலகம் முழுவதும் உருவாகும் எனக் கணிக்கப்பட்டாலும் இந்தியாவின் வளர்ச்சி அளவுகள் தொடர்ந்து சிறப்பாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சர்வதேச சந்தை பாதிப்பால் இந்தியாவில் பல பிரச்சனைகள் கட்டாயம் உருவாகும் அதில் ஒன்று தான் வர்த்தகப் பற்றாக்குறை.

வர்த்தகப் பற்றாக்குறை

வர்த்தகப் பற்றாக்குறை

சர்வதேச சந்தையில் பொருளாதார மந்தநிலை உருவாகியிருக்கும் நிலையில் இந்தியாவின் ஏற்றுமதி-யில் உணவு பொருட்கள் முதல் டெக்ஸ்டைல் வரையில் அனைத்தும் சரிய உள்ளதால் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கும்.

மத்திய அரசு

மத்திய அரசு

இதைச் சரி செய்ய மத்திய அரசு அத்தியாவசியம் அல்லாத இறக்குமதி பொருட்களுக்கும் கூடுதலான இறக்குமதி விதிக்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மத்திய நிதியமைச்சகம் இந்தியாவில் போதுமான உற்பத்தித் திறன் கொண்ட பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதைத் தடுக்கும் விதமாக இறக்குமதி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இறக்குமதி வரி உயர்வு

இறக்குமதி வரி உயர்வு

இதற்காக அனைத்து பிரிவுகளிலும் பெருட்களின் லிஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறது, இந்த லிஸ்ட் அத்தியாவசியம் மற்ற பொருட்களுக்கானது மட்டுமே, இதேவேளையில் இந்த வரி உயர்வு HSN குறியீட்டின் கீழ் வரும் பிற பொருட்களுக்கு இல்லை எனவும் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.

2022-23 பட்ஜெட்

2022-23 பட்ஜெட்

மத்திய அரசு கடைசியாகப் பெரும்பாலான பொருட்கள் மீது இறக்குமதி வரியை அதிகரித்தது 2022-23 பட்ஜெட் திட்டத்தில் தான். அப்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குடைகள், ஹெட்ஃபோன்கள், இயர்போன்கள், ஒலிபெருக்கிகள், ஸ்மார்ட் மீட்டர்கள் மற்றும் போலி நகைகள் போன்ற அன்றாட உபயோகப் பொருட்களுக்கு அதிகப்படியான சுங்க வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

சீனா

சீனா

இந்தத் தயாரிப்புகளில் பெரும்பாலானவை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன, அவை பெரும்பாலும் முழுமையாகத் தயாரிக்கப்பட்ட வடிவிலும் அல்லது உதிரிப்பாகங்கள் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் அசெம்பிள் செய்யப்படும் நாக் டவுன் யூனிட்களாகவோ இருக்கும்.

5 ஆண்டுகள்

5 ஆண்டுகள்

கடந்த 5 ஆண்டுகளில் பாதாம், ஆப்பிள் எனப் பல பொருட்களின் மீதான இறக்குமதி வரியை பல முறை உயர்த்தப்பட்டன. மொபைல் போன் உதிரிபாகங்கள் மற்றும் சோலார் பேனல்கள் ஆகியவற்றின் மீது அதிகப்படியான அதிக எண்ணிக்கையில் வரி உயர்த்தப்பட்டது.

அமெரிக்க டாலர் அல்லது யூரோ

அமெரிக்க டாலர் அல்லது யூரோ

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மத்தியிலான வித்தியாசம் தான் வர்த்தகப் பற்றாக்குறை எனக் கூறப்படுகிறது. பொதுவாக இந்தியா பெரும்பாலான இறக்குமதிகளுக்கு இந்தியா அமெரிக்க டாலர் அல்லது யூரோ வாயிலாகப் பேமெண்ட் செலுத்தி வருகிறது.

ரூபாய் மதிப்புப் பாதிப்பு

ரூபாய் மதிப்புப் பாதிப்பு

இந்த நிலையில் நாட்டின் இறக்குமதி குறைந்து ஏற்றுமதி அதிகரித்தால் ரூபாய் மதிப்பு பாதித்து நாட்டின் நிதி நிலை தடுமாறும். இந்த நிலையைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது இறக்குமதி பொருட்களுக்கான வரியை குறைக்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+