மீண்டும் அடி வாங்கப்போகிறதா ஜிடிபி.. எச்சரிக்கும் NCAER..!

உலகப் பொருளாதாரமே நலிவடைந்து வரும் நிலையில், இந்திய பொருளாதாரமும் படு வீழ்ச்சி கண்டு வருகிறது. இந்த நிலையில் பல சர்வதேச நிறுவனங்களும், நாட்டின் முதன்மை வங்கியான எஸ்பிஐயும் எச்சரித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது டெல்லியை தளமாகக் கொண்ட பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (NCAER) கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஜிடிபி 4.9 சதவிகிதமாக குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மீண்டும் அடி வாங்கப்போகிறதா ஜிடிபி.. எச்சரிக்கும் NCAER..!

கடந்த ஜூன் காலாண்டில் ஜிடிபி 5 சதவிகிதமாக ஆறு ஆண்டுகளில் குறைந்தது. நடப்பு நிதியாண்டில் இந்த பொருளாதார வளர்ச்சி சரிவடைந்து வருகிறது. இது கடந்த 2018 - 2019ல் 6.8 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னோக்கிச் செல்லும்போது நாணயக் கொள்கை நடவடிக்கைகள் இந்த கட்டத்தில் வளர்ச்சியைப் புதுபிக்க வாய்ப்பில்லை என்று கூறியது. நிதி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய முண்டில், நிதி பற்றாக்குறையை உயர்த்தாமல் செலவினங்களை அதிகரிக்க வேண்டியது அவசியம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

மேலும் நிலவி வரும் பொருளாதாரத்தை மேம்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்ப்பரேட்களுக்கு வரியை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வரி குறைப்புக்கு பிறகு நிறுவனங்கள் முதலீடு அதிகரித்துள்ளதா? அவை முதலீடு செய்கின்றனவா? நிலைமை இன்னும் மோசமாகத் தான் உள்ளது என்றும் முண்டில் கூறியுள்ளார்.

இதே NCAER- ன் மூத்த அதிகாரி ஒருவர் கடந்த 2008-லிருந்து உலகளாவிய நிதி நிலைமை மந்த நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உலகளாவிய மந்த நிலையில் இந்தியாவும் ஒரு கூர்மையான சந்திப்பை சந்தித்தது என்றும் தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஜிடிபி 4.9 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்துள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் முழுவதுமாக மொத்த உள்நாட்டு வளர்ச்சி 4.9 சதவிகிதமாகவே இருக்கும் என்றும் கணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த மாத இறுதிக்குள் கடந்த செப்டம்பர் மாத காலாண்டின் ஜிடிபி விகிதம் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில், இரண்டாவது காலாண்டில் 4.4 - 4.9 சதவிகிதம் வரை இருக்கலாம் என்றும் முண்டில் கூறியுள்ளார்.

பொருளாதாரத்தில் நிலவி வரும் மந்த நிலை அனைத்து துறைகளிலும் காணப்படுகிறது. அனைத்து துறைகளிலும் தேவை சரிந்துள்ளது என்றும் பண்டாரி தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதியும் இரண்டாவது காலாண்டில் சரிந்துள்ளது. இது கடந்த 2018 - 2019-ல் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இருந்து சரக்கு மற்றும் சேவைகளின் ஏற்றுமதி 1.9 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கடந்த 2018 - 2019ம் ஆண்டின் முதல் காலாண்டில் 8.1 சதவிகிதத்தை எட்டிய பின்னர், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கடந்த சில காலாண்டுகளில் தொடர்ந்து குறைந்து வருகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+