பொருளாதார ஆய்வறிக்கை 2021.. இந்திய பொருளாதார வளார்ச்சி 11% ஆக மதிப்பிடப்படலாம்..!

இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு மாபெரும் சவால்களுக்கு மத்தியில் இந்த பட்ஜெட் 2021 வரவிருக்கிறது. இந்த பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்தான பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டுள்ளது. பட்ஜெட்டுக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், இன்று இந்த பொருளாதார ஆய்வறிக்கை 2021ஐ நிதியமைச்சர் தாக்கல் செய்யவிருக்கிறார்.

பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பு

பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பு

இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 2021- 22ம் நிதியாண்டில் 11 சதவீதம் இருக்கலாம் என்றும் கணிக்கப்படலாம் என்று எதிர்பர்க்கப்படுகிறது. ஏனெனில் ஏப்ரல் 1 அன்று தொடங்கவிருக்கும் இந்த நிதியாண்டில் கொரோனா தொற்றில் இருந்து சற்று விடுதலை கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன அறிவிப்புகள் வரலாம்?

என்னென்ன அறிவிப்புகள் வரலாம்?

பட்ஜெட்டின் எதிரொலியாக இருக்கும் இந்த ஆய்வறிக்கையில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறித்தான அறிவிப்புகள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உள்கட்டமைப்பு துறை, விவசாயத்துறை,தொழிற்துறை, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, விலைவாசி, இறக்குமதி, நிதி ஊக்கம், அன்னிய இருப்பு, உள்ளிட்ட பலவற்றை பற்றியும் இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவால் பாதிப்பு

கொரோனாவால் பாதிப்பு

அதிலும் கடந்த ஆண்டில் இந்தியாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் சற்றே, குறையத் தொடங்கி இருந்தாலும், அதன் தாக்கம் இன்னும் பல ஆண்டுகளுக்கு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மோசமான மந்த நிலையில் உள்ள பொருளாதாரத்தினை மீட்டெடுக்க அரசு என்னென்ன செய்யப போகிறது. முக்கியமாக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும், சிறுகுறு மற்றும் நடுத்த தொழில் மற்றும் தொழிற்துறைகளுக்கு எந்த மாதிரியான அறிவிப்புகள் வரப்போகின்றன என்று சற்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வளர்ச்சி அதிகரிக்கும்

வளர்ச்சி அதிகரிக்கும்

எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த ஆண்டில் கொரோனாவினை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. ஆனால் நடப்பு ஆண்டில் பெரும்பாலான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பொருளாதாரம் நிச்சயம் வளர்ச்சி பாதைக்கு திரும்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணை புரியலாம் என்றும், கூடுதலாக அரசின் அறிவிப்புகள் இன்னும் பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+