நிதி பற்றாக்குறை நிச்சயம் இருக்கும்.. அரசு நிலையாக வைத்துக் கொள்ள வேண்டும்.. பொருளாதார ஆய்வறிக்கை..!

இந்தியாவில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளில் மிகப்பெரிய பிரச்சனையே நிதிப் பற்றாக்குறை தான்.

ஏனெனில் கடந்த ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் கொரோனாவினால் முடங்கியிருந்தது. இந்த நிலையில் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் பெரும் அளவு சரிவினைக் கண்டுள்ளது.

குறிப்பாக தொழிற்துறைகள் முடங்கிய நிலையில் அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் பெரும் அளவில் குறைந்தது.

நிச்சயம் நிதி பற்றாக்குறை இருக்கும்

நிச்சயம் நிதி பற்றாக்குறை இருக்கும்

நிறுவனங்களும் லாக்டவுன் காரணமாக முடங்கியிருந்த நிலையில், தற்போது தான் மீண்டு வர ஆரம்பித்துள்ளன. எனினும் கொரோனாவுக்கு முந்தைய நிலையினை இன்னும் அடைய வில்லை என்றே கூறலாம. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறை என்பது நிச்சயம் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றன.

இது ஒரு கடினமான ஆண்டே

இது ஒரு கடினமான ஆண்டே

தற்போது பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கை 2021ம், நிதி சரிவு என்பது நிச்சயம் இருக்கும். இந்த நிலையில் 2020 -21ம் ஆண்டு கடினமான ஆண்டாகவே இருந்தது. 2020 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான போக்குகளின் அடிப்படையில் இந்த நிதி சரிவானது ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகின்றது.

தேவை, செலவுகள் அதிகம்

தேவை, செலவுகள் அதிகம்

அதோடு இந்த உலகளாவிய தொற்று நோய், வருவாய் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ள இந்த காலகட்டத்தில், அதிக செலவு மற்றும் தேவைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் நடப்பு ஆண்டில் நிதி பற்றாக்குறையை பதிவும் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் நீண்டகால நிலைத்தன்மை என்பது அரசாங்கத்தின் வளர்ச்சி மீட்பு என்பதை பொறுத்தது என்றும் இந்த சர்வே சுட்டிக் காட்டியுள்ளது.

தேவையை மீட்க வேண்டும்

தேவையை மீட்க வேண்டும்

தொற்று நோயினால் பாதிகப்பட்டுள்ள பொருளாதாரத்தினை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும், சரிவினை மீட்டுக் கொண்டு வரவும் தேவை மற்றும் சப்ளையை மீட்க வேண்டும். எப்படி இருந்தாலும் அரசு வளர்ச்சி பாதையினை நோக்கி செல்லும் போது நிதி நிலைப்பாட்டை தொடர வேண்டியிருக்கும்.

நிதி ஊக்கம் அவசியம்

நிதி ஊக்கம் அவசியம்

அரசு அறிவித்த செலவின சப்போர்ட்கள் தேவையான நடுத்தர கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எப்படி இருப்பினும் நிதி ஊக்கம் என்பது அவசியம் என்றும் இந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது. ஆக நிச்சயம் இந்த பட்ஜெட்டில் இது
குறித்தான அறிவிப்புகள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+