டெல்லி: வரவிருக்கும் பிப்ரவரி 1 அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், இன்று பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் பட்ஜெட் 2021 பற்றி முக்கிய அம்சங்கள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பொருளாதார ஆய்வறிக்கை கூட்டத்திற்கு பின்னர், தலைமை பொருளாதார நிபுணர் கேவி சுப்பிரமணியம், மதியம் 2.30 மணியளவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாற்றவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இந்த ஆய்வறிக்கையானது பட்ஜெட்டுக்கு முந்தைய நாள் இருக்கும். ஆனால் இந்த முறை திங்கட்கிழமையன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக, இன்றே பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார்.பொதுவாக இந்த ஆய்வறிக்கையானது பட்ஜெட்டுக்கு முந்தைய நாள் இருக்கும். ஆனால் இந்த முறை திங்கட்கிழமையன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக, இன்றே பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார்.
நடப்பு ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். இப்படி ஒரு நிலையில் தான் பொருளாதார அய்வறிக்கையும் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அடுத்து அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டினை பிப்ரவரி 1 அன்று நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார். கடந்த ஆண்டில் கொரோனாவின் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தினை மீட்டெடுக்க இந்த ஆண்டும், பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இருக்கலாம் என்றும் பல தரப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஆண்டு பட்ஜெட் தாக்கலை பேப்பர்கள் மூலமாக அல்லாமல், டிஜிட்டல் மூலமாக தாக்கல் செய்யவிருப்பதாக நிதியமைச்சர் ஏற்கனவே கூறியிருந்தார்.
இதற்கிடையில் பல்வேறு தரப்பிலும் பரவலான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இதற்கிடையில் இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கிறது.


Click it and Unblock the Notifications