கொரோனாவின் தாக்கம் ஓய்ந்ததாக சற்று ஆறுதல் அடைந்த நிலையில், ஓமிக்ரான் வந்து மக்களை ஆட்டிப்படைக்க தொடங்கியுள்ளது.
முதல் இரண்டாம் அலையால் பெரும் சவாலை எதிர்கொண்ட மக்கள், மூன்றாம் அலையில் இருந்து எப்படி மீண்டு வரப்போகிறார்களோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
ஆனால் இன்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் மூன்றாவது அலையானது இருந்து வந்தாலும், இந்தியாவின் நுகர்வில் பெரிய தாக்கம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
தனித்துவமான யுக்தி
2021 - 22ல் இந்தியா 7% வளர்ச்சி கண்டுள்ளது. இது அரசின்செலவினங்களுக்கு மத்தியில் இந்த வளர்ச்சி விகிதத்தினை கண்டுள்ளது என ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதற்கு, அதன் தனித்துவமான யுக்தியும் ஒரு காரணம்.
பல்வேறு சீர்திருத்தங்கள்
தேவையை மட்டுமே மொத்தமாக நம்பியிருக்காமல், அதற்கு பதிலாக சப்ளை பக்கத்திலும் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளபட்டன. குறிப்பாக கட்டுப்பாடுகளை நீக்குதல், செயல்முறைகளை எளிமைபடுத்துதல், வரி விகிதம், தனியார்மயம், பிஎல்ஐ மூலம் வழங்கப்படும் சலுகைகள் என பலவும் வளர்ச்சிக்கு கைகொடுத்தன.
பணவீக்கம்
அரசின் மூலதன செலவினங்கள் அதிகரிப்பு கூட, தேவை மற்றும் சப்ளையை அதிகரிக்கலாம். இது எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கலாம். எனினும் உலகளவில் தற்போதைய காலக்கட்டங்களில் பணவீக்கம் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகின்றது. குறிப்பாக இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியினை செய்து வருகின்றது. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக மாறக்கூடும். இதன் காரணமாக அதில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
முதல், இரண்டாம் அலை போல் இல்லை
இப்படி மேற்கண்ட பல யுக்திகளுக்கும் மத்தியில், இந்தியாவில் முதல் அலை, இரண்டாம் அலை போல நாடு தழுவிய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை. தாக்கம் இருந்தாலும் கட்டுப்பாடுகளுடன் பொருளாதார வளர்ச்சிக்கான செயல்பாடுகள் இருந்து வருகின்றன. இதன் காரணமாக கடந்த ஆண்டுகளை போல நுகர்வு பெரியளவில் சரியவில்லை. தேவையும் வீழ்ச்சி காணவில்லை. அதோடு அரசின் பல்வேறு விதமான நடவடிக்கைகளுக்கு மத்தியில், வளர்ச்சி விகிதமான அதிகரித்து வருகின்றது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications