மோடி 3.0 அரசு வெளியிடும் முதல் பட்ஜெட் அறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்யவுள்ள நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் துவங்கிய கூட்டத்தொடரில் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார். இதில் இந்தியப் பொருளாதாரத்தை தலைகீழாகப் புரட்டிப்போடும் நாட்டின் உள்கட்டமைப்பு துறையின் வளர்ச்சியைப் பட்டியலிட்டு உள்ளது மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான குழு.
சாலை கட்டுமானம்: இந்தியாவில் அண்மைக்காலமாக, பெரிய அளவிலான உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு முதலீடு செய்வதில் மத்திய அரசின் பங்கு பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டுமான பணிகளின் வேகம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டில் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 11.7 கிலோமீட்டர் சாலை அமைக்கப்பட்டு இருந்த நிலையில், 2024-ம் ஆண்டில் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 34 கிலோமீட்டர் சாலை அமைக்கப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்திய ரயில்வே துறை: மத்திய அரசு ரயில்வே துறைக்கான மூலதன செலவுகள் கடந்த 5 வருடத்தில் 77 சதவீதம் அதிகரித்துள்ளன. புதிய ரயில் பாதைகள் அமைத்தல், அகல ரயில் பாதையாக மாற்றுதல், இரட்டை பாதை அமைத்தல் ஆகிய பணிகளுக்குக் கணிசமான முதலீடு செய்யப்பட்டுள்ளது.
விமான போக்குவரத்து: 2024-ம் ஆண்டில், 21 விமான நிலையங்களில் புதிய டெர்மினல் கட்டிடங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதன் மூலம், ஆண்டுதோறும் சுமார் 6.2 கோடி கூடுதல் விமான பயணிகளைக் கையாளும் திறன் அதிகரித்துள்ளது.
கப்பல் போக்குவரத்து: உலக வங்கியின் சர்வதேச லாஜிஸ்டிக்ஸ் செயல்திறன் குறியீட்டில், சர்வதேச கப்பல் போக்குவரத்து பிரிவில் இந்தியாவின் தரவரிசை 2014-ம் ஆண்டில் 44 ஆக இருந்தது 2023-ம் ஆண்டில் 22 ஆக முன்னேறியுள்ளது.
கிளீன் எனர்ஜி துறை: 2014 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் புதிய மற்றும் மாற்று எரிசக்தித் துறையில் 8.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மின்சார சேமிப்பு: உஜ்வாலா திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 48.42 பில்லியன் கிலோவாட் மணி நேரம் மின்சார சேமிக்கப்பட்டு உள்ளது. மேலும் 39.30 மில்லியன் டன் CO2 உமிழ்வைக் குறைப்பது, மற்றும் நுகர்வோர் மின்சார கட்டணத்தின் ஆண்டு மதிப்பு ரூ.19,335 கோடி மிச்சமாகிறது.
மெட்ரோ திட்டங்கள்: நாட்டின் 27 நகரங்களில் 945 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் அல்லது RRTS பாதைகள் செயல்பாட்டில் உள்ளன, மேலும் 939 கிலோமீட்டர் பாதைகள் கட்டுமான பணியில் உள்ளன. 2024-ம் ஆண்டில் சுமார் 86 கிலோமீட்டர் மெட்ரோ ரயில்/RRTS பாதைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
குடிநீர் திட்டம்: ஜல் ஜீவன் மிஷன் (JJM) திட்டத்தின் கீழ், கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது 14.89 கோடிக்கும் அதிகமாக உயர்ந்து 76.12% வளர்ச்சி பதிவாகியுள்ளது.
டெலிகாம் துறை: மத்திய தொலைத்தொடர்புத் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. ஜூன் 2024 நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 8.02 லட்சம் மொபைல் டவர்கள் உள்ளன, அதே நேரத்தில் பேஸ் டிரான்சிவர் ஸ்டேஷன்கள் (BTS) எண்ணிக்கை 29.37 லட்சமாகவும், 5G BTS களின் எண்ணிக்கை 4.5 லட்சமாக அதிகரித்துள்ளது.
விண்வெளி துறை: இந்திய தற்போது சுமார் 55 விண்வெளி சொத்துக்களை வைத்துள்ளது, இதில் 18 கம்யூனிகேஷன் செயற்கைக்கோள், 9 நேவிகேஷன் செயற்கைக்கோள், 5 சைன்டிபிக் செயற்கைக்கோள், 5 வானிலையியல் செயற்கைக்கோள், 20 எர்த் அப்சர்வேஷன் செயற்கைக்கோள் வைத்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications