உலகின் பல நாடுகளும் ரெசசனுக்குள் நுழையலாமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது. எனினும் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சற்றே குறைந்தாலும் வளர்ச்சி பாதையில் உள்ளது ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 8 - 8.5% வளர்ச்சியினை காணலாம் என்று பொருளாதார ஆய்வறிக்கையானது சுட்டிக் காட்டுகின்றது.
இது நாடு முழுவதுமான தடுப்பூசி பாதுகாப்பு, சப்ளை சங்கிலியில் செய்யப்பட்ட சீர்திருத்திருங்கள் மற்றும் வளர்ச்சியினை ஊக்குவிக்கும் நோக்கில் சிறப்பான பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இது மேற்கொண்டு அடுத்த ஆண்டில் வளர்ச்சியில் ஊக்கத்தினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனையே பொருளாதார ஆய்வறிக்கையானது சுட்டிக் காட்டியுள்ளது.
மூலதன செலவு இலக்கு
நடப்பு நிதியாண்டில் பட்ஜெட்டில் மூலதன செலவின இலக்கான 7.5 லட்சம் கோடி ரூபாயினை எட்ட வாய்ப்புள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது. மத்திய அரசு முதலீடுகளுடன், அரசு தனியார் முதலீடுகளையும் ஊக்குவித்து வருகின்றது.
கடந்த ஆண்டின காட்டிலும் மூலதன செலவினங்களை மத்திய அரசானது 63.4% அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதத்தில் தனியார் முதலீடுகளும் கணிசமான உச்சத்தினை எட்டியுள்ளது. தற்போதைய நிலையில் இப்படியே செல்லும் பட்சத்தில் அரசின் இலக்கானது எட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனங்கள் வளர்ச்சி அடையலாம்
இதற்கிடையில் தான் தற்போதைய முழு ஆண்டுக்கான மூலதன இலக்கு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களில் தனியார் முதலீடுகள் அதிகரிக்கலாம் என்ற நிலையில் அவற்றின் இருப்பு நிலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இது நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையலாம். இது பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம்.
இலக்கு அதிகரிப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022 - 23ம் நிதியாண்டிற்கான மூலதன செலவினங்களை 35.4% அதிகரித்து, 7.5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது முந்தைய ஆண்டில் 5.5 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வளர்ச்சியினை மீட்டு எடுக்க, அரசு தொடர்ந்து உந்துதலை கொடுத்து வருகின்றது.
வளர்ச்சி அதிகரிக்கும்
இதன் மூலம் மத்திய அரசு தொடர்ந்து வளர்ச்சியினை மேம்படுத்த முயன்று வருகின்றது. பொது செலவினங்களோடு, தனியார் முதலீடும் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் தான் மதிப்பிடப்பட்ட மூலதனத்தின் அடிப்படையில், நாட்டின் பொருளாதார உற்பத்தியானது கேபெக்ஸின் அளவை விட குறைந்தது, வளர்ச்சி நான்கு மடங்கு அதிகரிக்கும் என்றும் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.
முதலீடுகள் அதிகரிக்கலாம்
மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து மூலதன நிதியினை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. நிறுவனங்களும் இதனை வட்டியில்லா கடனாக பார்க்கின்றன. அன்னிய முதலீடுகளுக்கு பல்வேறு ஊக்கச் சலுகைகளையும் அரசு அறிவித்து வரும் நிலையில், வரவிருக்கும் ஆண்டிலும் முதலீடுகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications