இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், 2023-24 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6 - 6.8% ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் 2023 ஆம் நிதியாண்டில் இந்திய பணவீக்கம் 6.8 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளதாகப் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கை
இது மட்டும் அல்லாமல் பல பொருளாதார ஆய்வறிக்கையில் உலகப் பொருளாதார நாடுகள் உடன் ஒப்பிடுகையில், ரிசர்வ் வங்கியின் பணவீக்க சகிப்புத்தன்மை வரம்பைக் காட்டிலும் சிபிஐ பணவீக்கம் அதிகளவில் உயரவில்லை என்று பொருளாதார ஆய்வறிக்கை 2023ல் தெரிவித்துள்ளது.
3 பாதிப்புகள்
இந்தப் பணவீக்கத்திற்கு இந்தியாவின் நிலை மட்டும் காரணமில்லை, 2020 முதல் குறைந்தது 3 பாதிப்புகள் இந்திய மற்றும் சர்வதேச பொருளாதாரத்தைப் பாதித்துள்ளது. இதில் சிலவற்றில் இந்தியா நேரடியாகப் பாதிக்கப்பட்டாலும் மறைமுகப் பாதிப்பு தான் அதிகம்.
கொரோனா தொற்று
இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்க முதல் காரணம் கொரோனா தொற்றுநோயால் தூண்டப்பட்ட பொருளாதார மற்றும் உற்பத்தி பாதிப்பு. அதைத் தொடர்ந்து ரஷ்ய-உக்ரைன் மோதல் உலகளாவிய பணவீக்கத்திற்கு வழிவகுத்தது.
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்
இவ்விரண்டின் பாதிப்புக் காரணமாகப் பணவீக்கம் அதிகரித்த நிலையில், இதைக் கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தலைமையிலான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு செய்தது.
நடப்புக் கணக்குப் பற்றாக்குறை
இதனால் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை (CAD) விரிவடையச் செய்தது மற்றும் அதிக இறக்குமதியைக் கொண்ட பொருளாதார நாடுகளில் பணவீக்க அழுத்தங்கள் மூலம் அதிகரித்தது எனப் பொருளாதார ஆய்வறிக்கை 2023ல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஐஎம்எப் பணவீக்க கணிப்பு
ஐஎம்எப் அமைப்பு சுமார் 190 நாடுகளின் பொருளாதாரத்தைக் கண்காணித்து வரும் வேளையில், மத்திய வங்கிகளின் தொடர் வட்டி விகித உயர்வால் பணவீக்கம் 2023 ஆம் ஆண்டுக் குறையும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 2022 ல் சர்வதேச பணவீக்க அளவு 8.8 சதவீதமாக இருந்த நிலையில், 2023ல் 6.6 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
பொருளாதார வளர்ச்சி கணிப்பு
சர்வதேச நாணய நிதியம் 2023 ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதார வளர்ச்சி 2.9 சதவீதம் வரையில் உயரும் என்று தெரிவித்துள்ளது. ஐஎம்எப் அக்டோபர் மாத கணிப்பில் 2.7 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் எனத் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது இதை உயர்த்தியுள்ளது.
இந்திய பொருளாதார வளர்ச்சி
இதேவேளையில் 2022 ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதாரம் 3.4 சதவீதமாக இருந்தது என ஐஎம்எப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதேவேளையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டில் 6.1 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications