நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதியானது இது வரையில் இல்லாத அளவில் 422 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது.
பல்வேறு பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பட்ஜெட் 2023 ஆனது தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதில் உலகம் முழுவதும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. ஆனாலும் இந்த காலகட்டத்திலும் இந்தியாவின் வளர்ச்சியானது அதிகரித்துள்ளது.
சரக்கு ஏற்றுமதி விகிதம்
இதற்கிடையில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. உலகளாவிய அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியிலும், மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியினை கண்டுள்ளது.
குறிப்பாக கடந்த ஏப்ரல் - டிசம்பர் 2022 காலக்கட்டத்தில் வணிக பொருட்களின் ஏற்றுமதியானது 332.8 பில்லியன் டாலராக இருந்தது. இதே ஏப்ரல் - டிசம்பர் 2021ல் 305 பில்லியன் டாலராகவும் இருந்தது.
நகை ஏற்றுமதி
பெட்ரோலியம் அல்லாத மற்றும் ரத்தினங்கள் அல்லாத நகைகள் ஏற்றுமதியானது 233.5 பில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 230 பில்லியன் டாலராகவும் இருந்தது.
பார்மா துறை
இந்திய மருத்துவ துறையில் அன்னிய நேரடி முதலீட்டு விகிதமானது கடந்த செப்டம்பர் 2022ல் 20 பில்லியன் டாலர்களை தாண்டியது. எஃப்.டி.ஐ விகிதமானது கடந்த செப்டம்பர் 202 வரையிலான 5 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்து, 699 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
சாதகமற்ற அடிப்படைகளுக்கு மத்தியில் பார்மா துறையில் வளர்ச்சியானது குறைந்துள்ளது. எனினும் கொரோனாவின் தாக்கமும் குறைந்துள்ள நிலையில் மருந்து உற்பத்தியும் சரிவினைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹெல்த்கேர் துறை
மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பட்ஜெட்டில் ஹெல்த்கேர் துறைக்கு ஒதுக்கீடுகளை அதிகம் செய்து வருகின்றது. இது 2023ம் நிதியாண்டில் ஜிடிபியில் 2.1% அளவுக்கு செலவினங்கள் எட்டியுள்ளது. இது 2022ம் நிதியாண்டில் 2.2% ஆக இருந்தது. இதே 2021ம் நிதியாண்டில் 1.6% ஆகவும் இருந்தது. கொரோனா காலத்தில் கூட செலவினங்கள் குறைவாக இருந்த நிலையில், ஆண்டுக்கு ஆண்டு பட்ஜெட்டில் ஹெல்த் கேர் துறைக்கு ஒதுக்கீடுகள் அதிகம் செய்யப்படும் நிலையில் பட்ஜெட் 2023லும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications