Economic survey 2023: கொரோனாவின் வருகையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் சுற்றுலா துறையும் ஒன்று. உலகம் முழுக்க எந்த நேரத்தில் என்னவாகுமோ என்ற அச்சத்தின் மத்தியில், மக்கள் வீட்டினை பூட்டிக் கொண்டு வீட்டிற்குள்ளேயே இருந்த காலமும் உண்டு.
இந்த காலக்கட்டத்தில் மக்கள் பெரும்பாலும் அத்தியாவசிய தேவைக்கு தவிர, வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
மேலும் சர்வதேச அளவிலான விமான சேவை, உள்நாட்டிலும் விமான சேவை தொடங்கி, அனைத்து வகையான போக்குவரத்து சேவைகளும் முடங்கின. இதன் காரணமாக ஹாஸ்பிட்டாலிட்டி, போக்குவரத்து, சுற்றுலா என பல துறைகளும் மோசமான சரிவினைக் கண்டன.
சுற்றுலா துறை வளர்ச்சி
எனினும் தற்போது இந்தியாவில் சுற்றுலா துறையானது படிப்படியாக மீண்டு வந்து கொண்டுள்ளது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுற்றுலா துறையானது மீண்டும் வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளது. 2021ல் பொருளாதார ஆய்வறிக்கையின் படி, மருத்துவ சுற்றுலாவின் உலகின் 64 நாடுகளில் 10வது இடத்தினை இந்தியா பிடித்துள்ளது.
மருத்துவ சுற்றுலா அதிகரிப்பு
மருத்துவ சுற்றுலா பயணிகளுக்கு ஆயுஷ் விசா, சுதேசி தர்ஷன் 2.0 திட்டம் மற்றும் ஹீல் இன் இந்தியா திட்டம் என பலவும் மருத்துவ சுற்றுலாவினை ஊக்குவித்துள்ளன.
மேலும் சர்வதேச அளவிலான விமான சேவையானது நாட்டில் முடங்கியிருந்த நிலையில், தற்போது விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதுவும் சுற்றுலா பயணிகளை ஊக்குவித்துள்ளது. இது மேற்கொண்டு சுற்றுலா துறையின் வளர்ச்சியினை ஊக்குவித்துள்ளது.
ஹோட்டல் துறையில் வளர்ச்சி
நடப்பு ஆண்டில் மீண்டு வந்து கொண்டுள்ள சுற்றுலா துறையானது, மாதத்திற்கு மாதம் வளர்ச்சி கண்டு வருகின்றது.
இதற்கிடையில் ஹோட்டல் ஆகிரமிப்பு விகிதம் 33%ல் இருந்து, 36% ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளில் ஹோட்டல் துறையும் ஒன்று.
வளர்ச்சி அதிகரிக்கலாம்
எனினும் கடந்த மூன்றாவது காலாண்டிலும் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இது இனி வரவிருக்கும் காலாண்டுகளிலும் வளர்ச்சி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்துறையினை மீட்டு எடுக்க சுற்றுலா துறையினை சார்ந்துள்ள ஹோட்டல்களுக்கு, ஜிஎஸ்டி விகிதம் குறைப்பு, விசாவில் கட்டுப்பாடுகள் தளர்வுகள் அளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் சுற்றுலா மையங்களை மேற்கொண்டு மக்களை கவரும் வகையில் மேம்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications