Economic survey 2023: உலகளாவிய வளர்ச்சி சரிவால் இந்திய ஏற்றுமதி சரிவு! ஆய்வறிக்கையில் வெளியான உண்மை!

உலகளாவிய அளவில் நிலவி வரும் மந்த நிலை, பணவீக்கம், வேலையிழப்பு என பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இது நடப்பு ஆண்டில் வளர்ச்சியில் ஏற்பட்ட தாக்கம், பொருளாதார ரீதியாக ஏற்பட்ட பிரச்சனை, முதலீடுகள் சரிவு, கடன் அதிகரிப்பு என பல காரணிகளுக்கு மத்தியில் தேவையானது சரிவினைக் கண்டது.

மேலும் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், ஏற்றுமதி இறக்குமதியும் சரிவினைக் கண்டுள்ளது. குறிப்பாக நடப்பு ஆண்டின் பிற்பாதியில் மோசமான சரிவினைக் கண்டுள்ளது.

ஏற்றுமதி அதிகரிப்பு

ஏற்றுமதி அதிகரிப்பு

இதற்கிடையில் சர்வதேச அளவிலான மெதுவான வளர்ச்சி, இதனால் பாதிக்கப்பட்ட உலகளாவிய வர்த்தகம் என பல காரணிகளுக்கு மத்தியில் தேவையானது சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியானது சரிவினைக் கண்டுள்ளது.
எனினும் இது முந்தைய ஆண்டுகளை காட்டிலும் அதிகரித்துள்ளது.

 எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இதற்கிடையில் நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சியானது 7% இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி விகிதமானது 6 - 6.8% ஆக வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவினை விட மிகப்பெரிய நாடுகளில் வளர்ச்சி விகிதமானது மந்த நிலையில் இருக்கும் நிலையில், இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது நேர்மறையாக உள்ளது. இது மேற்கொண்டு உற்பத்தியினையும் தேவையும் அதிகரிக்கலாம். இது ஏற்றுமதியினையும் அதிகரிக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்சாதனங்கள் ஏற்றுமதி

மின்சாதனங்கள் ஏற்றுமதி

கடந்த ஏப்ரல் - நவம்பர் மாதம் வரையிலான 8 மாத ஏற்றுமதியானது, 1.13 லட்சம் கோடி ரூபாயாக (13.8) அதிகரித்துள்ளது. இது முழுக்க முழுக்க மின்சாதனங்கள் ஆகும். இது கடந்த ஆண்டினை காட்டிலும் 55% அதிகமாகும். இது முந்தைய ஆண்டில் மின்சாதனங்கள் ஏற்றுமதியானது 73,000 கோடி ரூபாய் (8.9 பில்லியன் டாலர்) ஆக இருந்தது.

என்ன காரணம் தெரியுமா?

என்ன காரணம் தெரியுமா?

கொரோனாவுக்கு முன்பை காட்டிலும் இந்தியாவின் மின்சாதன ஏற்றுமதியானது, 87% அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் முதல் 8 மாதங்களில் மின் சாதனங்களின் ஏற்றுமதியானது 60,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த அளவுக்கு ஏற்றத்தினை கண்டுள்ளது. இதற்கு அரசின் பிஎல்ஐ உள்ளிட்ட திட்டங்கள் முக்கிய காரணம் எனலாம்.

ஸ்மார்ட்போன் ஏற்றுமதி

ஸ்மார்ட்போன் ஏற்றுமதி

இதில் குறிப்பாக மொபைல்போன்கள், நுகர்வோர் மின்சாதன பொருட்கள், தொழில்துறை சார்ந்த மின் சாதன பொருட்கள் என பலவும் அடங்கும். இந்தியா சர்வதேச அளவில் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதியாளராகும். இது கடந்த 2015ல் 6 கோடி யூனிட்களாக இருந்தது, 2022ம் நிதியாண்டில் 31 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது.

அதிகரிக்கலாம்

அதிகரிக்கலாம்

இது சர்வதேச அளவில் அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில், ஏற்றுமதியும் அதிகரித்து வருகின்றது. இது அரசின் ஊக்க சலுகைகள் மேன் இந்தியா, ஆத்ம நிர்பார் திட்டம் என பலவும் காரணம் எனலாம். இதற்கிடையில் இனி வரவிருக்கும் ஆண்டில் இந்த விகிதம் இனியும் படிப்படியாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முழுக்க மேட் இன் இந்தியா பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+