2022-23ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, பொருளாதார ஆய்வறிக்கை ஹைலைட்ஸ், பொருளாதார ஆய்வறிக்கை புள்ளியியல் பின் இணைப்பு ஆகிய 3 அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த 3 அறிக்கைகளையும் ஆங்கிலம் மற்று ஹிந்தி மொழியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்துள்ளார்.
2022-23 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் 2023-24 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6-6.8% ஆக இருக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
2023 ஆம் நிதியாண்டில் இந்திய பணவீக்கம் 6.8 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளதாகப் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி-யின் 2வது ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் கடைசி முழுப் பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த 2022-23ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை மிகவும் முக்கியமானதாக உள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கை இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகரின் வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்பட்டது. மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (PMEAC) முன்னாள் உறுப்பினரான வி அனந்த நாகேஸ்வரன், 2023 -24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் திட்டம் தயாரிப்பதற்கான சில வாரங்களுக்கு முன்பு தான் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications