உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் தங்கள் பொருட்களை உற்பத்தி செய்து முன்னிலை வகிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறது. இதில், சீனா நீண்ட காலமாக முன்னிலையில் இருந்து கொண்டு தனக்கென்று ஒரு இடம் வைத்துள்ளது. இந்தியாவும் தற்போது தன்னை ஒரு முக்கிய உற்பத்தியாளராக முன்னேற்றுவது குறித்து செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்தியா உற்பத்தி உலகில் முன்னணி வகிக்க சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் கட்டுரையில் இந்த சவால்கள் பற்றியும், இந்தியா எதிர்காலத்தில் சிறந்த உற்பத்தியாளராக உருவெடுக்க என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றியும் பாப்போம்.
திங்களன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில், இந்தியா-சீனா இடையேயான பொருளாதார உறவுகள் மிகவும் சிக்கலானவை என்றும், அவை ஒன்றோடு ஒன்றாக பின்னிப் பிணைந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது உலக அளவில் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, விநியோகம் செய்யப்படுவதில் சீனாவின் ஆதிக்கம் மிகவும் வலுவாக இருக்கிறது. உக்ரைன் போரினால் ஏற்பட்ட விநியோக சீர்குலைவுகளின் போதும் கூட சீனாவின் ஆதிக்கம் குறையவில்லை.
சீனா தனது உற்பத்தி துறையில் இருந்து முற்றிலுமாக விலக வாய்ப்புகள் குறைவு. மாறாக, சர்வதேச விநியோக சங்கிலிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தவே விரும்பும். இது இந்தியாவுக்கு ஒரு பெரிய சவால்.
சமீப ஆண்டுகளில் இந்தியா, சில கட்டமைப்புச் சிக்கல்களால் மந்தநிலையைச் சந்தித்த சீனாவை விட வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், இந்திய பொருளாதாரத்தின் அளவு சீனாவின் ஒரு பகுதியாகவே உள்ளது. இது இந்தியாவுக்கு மற்றொரு பெரிய சவால்.
அதேபோல இந்தியா தனது பசுமை ஆற்றல் இலக்குகளை அடைய வேண்டும் என்றால் அதற்கு சில கனிமங்கள் தேவைப்படுகிறது. ஆனால் இது போன்ற அரிதான பூமி கனிமங்களின் உற்பத்தி சீனாவில் அதிகமாக உள்ளது. இது உலக நாடுகளுக்கு கவலை அளிக்கும் ஒரு விஷயம் என்று ஆய்வு கூறுகிறது.
இந்தியா உலகளவில் உற்பத்திகளில் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறது. ஆனால் சீனா மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியுடன் இருப்பதால் இந்தியாவின் திட்டங்கள் சற்று பின் தங்கியுள்ளது.
சீனா பல்வேறு பொருட்களின் உற்பத்தியில் பெரும்பான்மை பங்கு வகிக்கிறது. இதனால், இந்திய நிறுவனங்கள் சீனாவிடம் மூலப்பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சில சமயங்களில் அரசியல் காரணங்களுக்காக சீனா மூலப்பொருட்களை வழங்குவதை நிறுத்தி விடலாம் என்ற அச்சமும் உலக நாடுகள் மத்தியில் உள்ளது.
சீனாவுடனான போட்டியை சமாளிக்க இந்தியா என்ன செய்ய வேண்டும்?: சீனாவுடனான போட்டியை சமாளிக்க இந்தியா, தனது உள்நாட்டு உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும். சில சமயங்களில் சீனாவின் தொழில்நுட்ப உதவியுடனும் கூட்டு சேர்ந்து பணியாற்றலாம் என்று ஆய்வு பரிந்துரைக்கிறது.
சீனாவுடனான வர்த்தகத்தில் இந்தியாவுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. 2023-2024-ஆம் ஆண்டில், இந்தியா சீனாவுக்கு ஏற்றுமதி செய்தது வெறும் $16.65 பில்லியன் மட்டுமே. ஆனால், சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்த தொகை $101.75 பில்லியன். இதனால், இந்தியாவுக்கு $85.08 பில்லியன் வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் போது இது போன்ற சிக்கல்களில் இருந்து சற்று விடிவுகாலம் கிடைக்கும் என்று ஆய்வு பரிந்துரைக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications