ஜூலை 23-ஆம் தேதி அன்று 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் பட்ஜெட் அறிவிப்புக்கு ஒரு நாள் முன்னதாக அதாவது ஜூலை 22-ஆம் தேதியான இன்று இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். தற்போதைய பொருளாதார சூழ்நிலையின் விவரங்கள் மற்றும் வரும் நிதியாண்டிற்கான வளர்ச்சி குறித்த விவரங்கள் இருக்கும் இந்த ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.
கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த விவரங்கள், ஒவ்வொரு துறைகளின் வளர்ச்சி போக்கு எப்படி இருந்தது? ஏதேனும் துறைக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டதா? மேலும் வரும் நிதியாண்டில் எந்தெந்த துறைகளுக்கு கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்பது போன்ற விவரங்கள் இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த ஆண்டு தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்படியானால் ஏன் இடைக்கால பட்ஜெட்டுக்கு மட்டும் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். நாடாளுமன்ற சட்டங்களின்படி தேர்தல் ஆண்டில் இடைக்கால பட்ஜெட்டுக்கு ஏற்ப பொருளாதார ஆய்வறிக்கையை ஆளும் கட்சி தாக்கல் செய்யக்கூடாது.
எனவே தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஆளும் கட்சி அரசாங்கம் அமைத்து பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பிறகு தான் சமர்ப்பிக்க வேண்டும். அதனால் தான் பொருளாதார ஆய்வறிக்கை 2024-ஆம் ஆண்டிற்கு இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். இது மொரார்ஜி தேசாய் வைத்திருந்த ஆறு பட்ஜெட் தாக்கல் செய்யும் சாதனையை முறியடிக்கும் சாதனையாகும். பட்ஜெட்டில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, வருமானம் சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பட்ஜெட்டில் வரி நடவடிக்கைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்கள், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரை இலக்காகக் கொண்டு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார ஆய்வு ஏன் முக்கியமானது?: முன்பு சொன்னது போல் கடந்த நிதியாண்டில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றங்கள், முக்கிய வளர்ச்சி திட்டங்களின் செயல் திறனை சுருக்கமாக எடுத்துக்காட்டும் விதமாக தயாரிக்கப்படுகிறது. மேலும் அரசாங்கத்தின் கொள்கைகள் முன்முயற்சிகள் ஆகியவற்றையும் வழங்குகிறது.
நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் வழக்கம் போல காகிதம் இல்லா முறையில் டிஜிட்டல் வடிவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தயாரிப்பதற்காக நிர்மலா சீதாராமன் பல்வேறு துறைகளை சார்ந்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அவர்களுடைய தேவையை கேட்டு தெரிந்து கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக கல்வித்துறை, வேலை வாய்ப்பு, நடுத்தர நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொருளாதார வல்லுநர்கள் ஆகியோரின் ஆலோசனைகளையும் கேட்டுள்ளார்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications