பட்ஜெட் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று துவங்கிய நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். தலைமை பொருளாதார ஆலோசகரின் வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்படும் இந்த ஆய்வறிக்கை, இந்தியப் பொருளாதாரத்தின் விரிவான ஆய்வறிக்கையாக உள்ளது.
இந்த அறிக்கையின் நாட்டின் பொருளாதாரம், நிதி நிலை, முக்கிய துறைகளின் வளர்ச்சி, வெளிநாட்டு முதலீடுகள், விலைவாசி, பணவீக்கம், வளர்ச்சி பாதை, முதலீடு, உள்கட்டமைப்பு, தொழிற்துறை, சேவை துறை, விவசாயம் என பல முக்கியமான பரிவுகளை பற்றி விளக்கமாக கொடுக்கப்பட்டு உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 13 வரை தொடரும். 2ஆம் பகுதி இடைவேளைக்குப் பிறகு மார்ச் 10 அன்று இரு அவைகளும் மீண்டும் கூடி, ஏப்ரல் 4 அன்று கூட்டத்தொடர் நிறைவடையும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நிகழ்வாக காலையில் பிரதமர் மோடி மக்களிடம் உரையாடினார், அதைதொடர்ந்து குடியரசு தலைவர் நடப்பு ஆண்டில் செய்யப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டார். இதை தொடர்ந்து நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இந்த பொருளாதார அறிக்கையில் முதல் பகுதியாக இருப்பது நாட்டின் பொருளாதார நிலை தான்.
உலகளாவிய பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டில் 3.3 சதவீதம் வளர்ச்சியடைந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகளாவிய வளர்ச்சி சராசரியாக 3.2 சதவீதம் இருக்கும் என்று ஐஎம்எப் கணித்துள்ளது. இது வரலாற்று அளவில் மிகவும் மிதமான வளர்ச்சி அளவு என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உலகில் பல்வேறு நாடுகளில் பணவீக்க விகிதங்கள் தொடர்ந்து குறைந்து, மத்திய வங்கிகளின் இலக்கு அளவுகளுக்கு நெருங்கி வருகின்றன. பணவீக்கம் கடுமையாகக் குறைந்ததை கவனத்தில் கொண்டு, உலகில் பல மத்திய வங்கிகள் தங்களுடைய பென்ச்மார்க் வட்டி விகிதங்களை குறைத்து வருகின்றன. இதேவேலையில் உலக நாடுகளில் தொடர்ந்து நடைபெறும் மோதல்கள் மற்றும் பதட்டமான சூழ்நிலை காரணமாக புவிசார் அரசியல் அபாயங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி பாதையில் சில பாதிப்புகளும் உள்ளது என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உலகளாவிய நிச்சயமற்ற நிலை இருந்தபோதிலும், 2025 நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ரியல் ஜிடிபி) வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என்று முதற்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இது கடந்த 10 வருட கால சராசரி அளவுக்கு நிகராக உள்ளது என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் உண்மையான மொத்த மதிப்பு கூட்டம் (GVA) 2025 நிதியாண்டில் 6.4 சதவீதம் வளரக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலுக்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டு ஜூலை - நவம்பர் மாதங்களில் ஒன்றிய அரசின் கேபக்ஸ் 8.2 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024 நிதியாண்டில் 5.4 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் - டிசம்பர் மாதங்களில் 4.9 சதவீதமாக குறைந்துள்ளது.
உலகளாவிய பொருளாதாரத்தில் ஏற்பட்ட தடுமாற்றம் இந்திய வர்த்தகத்தை நடப்பு நிதியாண்டில் பாதித்துள்ளது. இருப்பினும், 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் - டிசம்பர் மாதங்களில், பெட்ரோலியம் அல்லாத மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் நகைகள் அல்லாத ஏற்றுமதி 9.1 சதவீதம் அதிகரித்துள்ளது என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கித் துறையில் மொத்த வாராக் கடன் (என்பிஏ) 12 ஆண்டுகளில் குறைந்தபட்சமான 2.6 சதவீதமாக குறைந்துள்ளது என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடைசியாக இப்பிரிவில் உள்நாட்டு மற்றும் சர்வதேச வளர்ச்சி பாதிப்புகளை கருத்தில் கொண்டு 2026 நிதியாண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 6.3 முதல் 6.8 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications