மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். தலைமை பொருளாதார ஆலோசகரின் வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்படும் இந்த ஆய்வறிக்கை, இந்தியப் பொருளாதாரத்தின் விரிவான செயல்திறன் அறிக்கையாக திகழ்கிறது. சுறுக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இதுதான் இந்திய பொருளாதாரத்தின் RANK CARD.
இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் இந்தியாவின் முந்தைய ஆண்டின் முக்கிய செயல்திறன் அளவுகளை கணக்கிட்டு வெளியிடுவதோடு, பொருளாதார வளர்ச்சி போக்குகள் குறித்த புரிதலையும் நாட்டு மக்களுக்கு வழங்குகிறது. மேலும், அடுத்த நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி பாதையும் இதில் இருந்து கணிக்கப்பட உள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கை, நாட்டின் பொருளாதார நிலைமையை விரிவாக ஆய்வு செய்கிறது. இதில் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், வேலைவாய்ப்பு, தொழில், விவசாயம், வெளிநாட்டு வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயல்திறன் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஆய்வறிக்கை அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை வகுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் வெளியிடப்பட்டும் திட்டங்களுக்கு இந்த பொருளாதார ஆய்வறிக்கையை முக்கிய வழிகாட்டியாக உள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கை, பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முந்தைய நாளில் தாக்கல் செய்யப்படுவதால், பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள கொள்கை முடிவுகளை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். பொருளாதார ஆய்வறிக்கையில் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் மற்றும் கண்டுபிடிப்புகள், நிதியமைச்சர் மற்றும் அரசாங்கத்தை பட்ஜெட் வகுக்கும் போது கருத்தில் கொள்ளப்படும்.
பொருளாதார ஆய்வறிக்கை, பொருளாதார நிபுணர்கள், தொழில்துறை தலைவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் எதிர்பார்க்கப்படும் ஒரு முக்கியமான ஆவணமாகும். இந்த ஆய்வறிக்கை, இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால முன்னோக்கைப் பற்றிய விரிவான புரிதலை வழங்கும்.
பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தீவிரமான தயாரிப்புகளில் ஈடுபடுவார். பட்ஜெட் தாக்கல் நாளில், நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து, அரசாங்கத்தின் வருவாய் மற்றும் செலவின திட்டங்களை அறிவிப்பார். இந்த பட்ஜெட் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், சமூக நலனை மேம்படுத்துவதற்கும் முக்கிய பங்கு வகிக்கும்.


Click it and Unblock the Notifications