நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனவரி 29, 2026 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2025-26 பொருளாதார ஆய்வறிக்கையில் 'வளர்ச்சி' என்ற சொல் சுமார் 889 முறை இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த வருடம் அதிகம் குறிப்பிடப்பட்ட சொல்லாக Growth உள்ளது.
இதை தொடர்ந்து சற்றும் எதிர்பார்க்காத வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) 387 முறை பயன்படுத்தப்பட்டு 2வது இடத்தை பிடித்துள்ளது. உலகம் முழுவதும் ஏஐ நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் இந்தியாவும் இந்த ரேசில் ஓட தயாராகியுள்ளது.
இந்த பட்டியலில் 3வது இடம் வேலைவாய்ப்பு (Employment) 305 முறை இடம்பெற்றுள்ளன. இந்த ஆய்வறிக்கை அடுத்த நிதியாண்டுக்கான பொருளாதார கொள்கைகளுக்கு வழிகாட்டும் முக்கிய ஆவணமாகும். இதனால் பொருளாதாக ஆய்வறிக்கையின் டோன் பட்ஜெட்டிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆய்வறிக்கையில் அதிகம் பயன்படுத்தப்பட்ட 11 முக்கிய சொற்கள் மற்றும் அவை எத்தனை முறை குறிப்பிடப்பட்டுள்ளன என்பது குறித்த முழு விபரம்:
வளர்ச்சி (Growth) - 889 முறை, செயற்கை நுண்ணறிவு (AI) - 387 முறை, வேலைவாய்ப்பு (Employment) - 305 முறை, பணவீக்கம் (Inflation) - 287 முறை, வேலைவாய்ப்பு (Jobs) - 123 முறை, வெளிநாட்டு முதலீடு (FDI) - 141 முறை, வரி (Tariffs) - 101 முறை, புவிசார் அரசியல் (Geopolitics) - 80 முறை, அமெரிக்கா (United States) - 47 முறை, ரூபாய் (Rupee) - 26 முறை, ஆத்மநிர்பர் (Aatmanirbhar) - 9 முறை பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த சொற்களின் பயன்பாட்டின் மூலம் அரசின் முன்னுரிமைகளை தெளிவாக காட்டுகிறது. வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு மீதான கவனம் நாட்டின் பொருளாதார வலிமையை உறுதிப்படுத்துவதை பிரதிபலிக்கிறது.
AI-யின் மீதான கவனம் தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதை காட்டுகிறது. பணவீக்கம், FDI, வரி போன்ற சொற்கள் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் உலகளாவிய இணைப்பு மீதான கவனத்தை வெளிப்படுத்துகின்றன.
புவிசார் அரசியல் மற்றும் அமெரிக்கா குறித்த குறிப்புகள் உலகளாவிய சூழலை கருத்தில் கொண்டு கொள்கைகள் வகுக்கப்படுவதை காட்டுகின்றன. ரூபாய் மற்றும் ஆத்மநிர்பர் குறித்த குறைந்த குறிப்புகள் உள்ளூர் பொருளாதார வலிமை மற்றும் சுயசார்பு மீதான தொடர்ச்சியான கவனத்தை பிரதிபலிக்கின்றன.
பொருளாதார ஆய்வறிக்கையை யார் தயாரிப்பார்?
இந்தய பொருளாதார ஆய்வறிக்கையை, தலைமைப் பொருளாதார ஆலோசகரின் (Chief Economic Advisor) வழிகாட்டுதலின் கீழ், மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரங்கள் துறை (DEA) தயாரிக்கிறது. இந்த ஆவணம் மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக நிதியமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.
இந்த ஆய்வறிக்கை பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டுக்கு அடிப்படையாக அமையும். சாதாரண மக்களுக்கு இது வேலைவாய்ப்பு, பணவீக்க கட்டுப்பாடு, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் அரசின் திட்டங்களை புரிந்துகொள்ள உதவும். AI மற்றும் வளர்ச்சி மீதான கவனம் எதிர்காலத்தில் புதிய வேலைகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications