2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று துவங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார்.
ஜிடிபி வளர்ச்சி
இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் நாட்டின் பொருளாதாரம் 2023ஆம் நிதியாண்டில் 8 முதல் 8.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2021-22ஆம் நிதியாண்டு
இதேபோல் 2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 9.2 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என மத்திய அரசு தனது பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் ஐஎம்எப் வெளியிட்ட கணிப்பில் இந்தியாவின் பொருளாதாரம் 9 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் என தெரிவித்துள்ளது.
விவசாய துறை
கொரோனா தொற்று பாதிப்புகள் விவசாய துறையைப் பெரிய அளவில் பாதிக்காத நிலையில், 2021-22ஆம் நிதியாண்டில் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறை சுமார் 3.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இதன் அளவு 3.6 சதவீதமாக இருந்தது.
தொழிற்துறை வளர்ச்சி
கொரோனா தொற்றில் இருந்து இந்திய வர்த்தக சந்தை மீண்டும் வரும் நிலையில், ஒமிக்ரான் நாட்டின் வளர்ச்சியிலும், வர்த்தகத்திலும் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படுத்தாத நிலையில், 2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி 11.8 சதவீதமாக இருக்கும் எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சேவைத் துறை
இதேபோல் இந்தியாவின் சேவைத் துறை 2021-22ஆம் நிதியாண்டில் 8.2 சதவீதம் வளர்ச்சி அடையும் எனவும், மேக்ரோ எகோ இண்டிகேட்டர்ஸ் 2022-23ஆம் நிதியாண்டில் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது எனவும் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications