டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் பாரம்பரிய முறைப்படி இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெறுள்ள முக்கியமான 10 விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய பொருளாதாரம் சீராக இருக்கும்: சர்வதேச அளவில் நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும் 2024 -25 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.4 சதவீதம் என இருக்கிறது. இது பத்தாண்டு கால சராசரியை நெருங்கி உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஜிவிஏ (GVA- real gross value added) 2025 ஆம் நிதியாண்டில் 6.4 சதவீதம் வளரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

வளர்ச்சியில் அனைத்து துறைகளின் பங்களிப்பு: பொருளாதார ஆய்வு அறிக்கை இந்தியாவில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படுகிறது என தெரிவித்துள்ளது. குறிப்பாக நாட்டில் வேளாண்மை துறை மிகவும் வலுவான நிலையில் இருப்பதாகவும் , கொரோனா காலத்திற்கு முன்பிருந்த நிலையை விட தொழில் துறை நல்ல வளர்ச்சியை எட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கட்டுக்குள் வரும் பணவீக்கம்: பொருளாதார ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ள தகவலின் படி சில்லறை பணவீக்கம் 2023-24இல் 5.5 சதவீதமாக இருந்து 2024-25 ஆம் ஆண்டில் 4.9 சதவீதம் என குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் அரசு பண வீக்கத்தை மிகச் சிறப்பாக கையாண்டு இருக்கிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2026ஆம் நிதியாண்டில் நுகர்வோர் விலை பணவீக்கம் 4 சதவீதமாகும் என தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு முதலீடுகள்: சர்வதேச சந்தைகளில் நிலவும் ஸ்திரமற்ற தன்மை காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலரும் இந்திய சந்தையில் செய்துள்ள முதலீடுகளை பெருமளவில் திரும்ப பெற்றுக் கொண்டனர் . ஆனால் வலுவான மேக்ரோ பொருளாதாரம் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்தியாவை நோக்கி வர தொடங்கியுள்ளனர் என பொருளாதார ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது. நேரடி அந்நிய முதலீடு 2024-25 ஆம் நிதியாண்டின் முதல் 8 மாத காலத்தில் மீண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கரன்சி கையிருப்பு: நாட்டில் வெளிநாட்டு கரன்சி கையிருப்பு வலுவாக இருக்கிறது . இந்தியாவின் வெளிநாட்டு கரன்சி கையிருப்பு 2024 செப்டம்பரில் 706 பில்லியன் டாலர்கள் என்ற உச்சத்தை எட்டியது.
வங்கி மற்றும் காப்பீடு துறை: இந்தியாவில் வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன்கள் கணிசமான அளவு உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் மற்றும் ஜிடிபுக்கு இடையிலான இடைவெளி முதல் காலாண்டில் – 10.3 சதவீதமாக இருந்து தற்போது 0. 3 சதவீதம் என பாசிட்டிவான நிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல காப்பீடு பிரிமியங்கள் 7.7 சதவீதம் என்ற அளவிலும் ஓய்வூதிய திட்டத்திற்கான சந்தாக்கள் 16 சதவீதம் என வளர்ச்சி அடைந்துள்ளது.
ஏற்றுமதி உயர்வு: இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 2025 ஆம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் கணிசமான அளவு உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் 9 மாத காலத்தில் ஏற்றுமதி அளவு 602.6 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட 6 சதவீதம் அதிகமாகும். அதே போல இந்தியாவின் இறக்குமதி மதிப்பு 682.2 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. இதுவும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 6.9% அதிகரித்துள்ளது.
எம்எஸ்எம்ஈ கடன்: சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக வழங்கப்படும் கடன்கள் அதிகரித்திருப்பதாக பொருளாதார ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது. இதன் மூலம் நாட்டில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதனால் ஏற்படும் வேலை வாய்ப்புகளும் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. 2024 நவம்பர் மாத நிலவரப்படி இந்தியாவில் எம்எஸ்எம்ஈ நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன் விகிதம் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளையில் சேவை துறை மற்றும் தனிநபர் கடன் வழங்கும் பிரிவுகள் பெரிய அளவில் வளர்ச்சியும் அடையவில்லை, சரிவையும் சந்திக்கவில்லை.
கட்டுப்பாடுகளை தளர்த்தல்: பொருளாதார ஆய்வு அறிக்கை நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் எனில் சில கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. சில குறிப்பிட்ட ஒழுங்கு முறைகளை நீக்கி மக்களிடமும் அதாவது தனி நபர்களிடமும் அமைப்புகளிடமும் பொருளாதார சுதந்திரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என குறிப்பிடுகிறது.
உள்கட்டமைப்பு மற்றும் தனியார் பங்களிப்பு: நாட்டில் உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்துவதில் அரசு ஏற்கனவே கவனம் செலுத்தி வருகிறது இது சிறந்த முடிவுகளை தந்திருக்கிறது என பொருளாதார ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது. உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அரசு மட்டுமே முயற்சி எடுத்தால் போதாது இதில் தனியார் பங்களிப்பும் அவசியம் என பொருளாதார ஆய்வு அறிக்கை கூறுகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications