மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை 2023-24, வளர்ச்சிக்கான புதிய உத்திகளை முன்வைத்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் அனைத்தும் நாட்டின் பொருளாதாரத்தின் சப்ளை பக்கத்தில் இருக்கும் தடைகளையும், பிரச்சனைகளையும் சீர்திருத்தும் வண்ணம் இருந்தது. இனிவரும் காலகட்டத்தில், பொருளாதார சீர்திருத்தம் என்பது கீழ்நோக்கிய அதாவது bottom-up அணுகுமுறையுடன் புதிய தலைமுறை சீர்திருத்தங்களாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வலுவாகவும், நிலையாகவும், சமநிலையிலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைய வழிவகுக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் அம்ரித் கால் மற்றும் விக்சிட் பாரத் 2047 ஆகியவற்றின் இலக்கை அடைய ஆறு முக்கிய விஷயங்களை அடிப்படையாக வைத்து பொருளாதார ஆய்வறிக்கையில் வளர்ச்சி உத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. இது முதலீட்டு சந்தையை கட்டாயம் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1. தனியார் துறையில் மூலதன உருவாக்கம்: தனியார் துறையில் மூலதன உருவாக்கம் இயல்பாக மற்றும் தொடர்ச்சியாக அதிகரிப்பதை உறுதி செய்வது அவசியம். இதன் மூலம் வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிலாளர்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கும்.
2. பசுமை மாற்றத்திற்கான நிதி திரட்டுதல்: மின்சாரம் முதல் எரிபொருள் வரையில் பசுமை மாற்றம் அதாவது கிரீன் டிரான்சிஷன்-க்கான நிதி திரட்டலில் தனியார்- பொதுத்துறை கூட்டு முயற்சிகள் முக்கிய பங்கு வகிக்கும். இந்தியாவின் பசுமை மாற்ற முயற்சிகளுக்கு போதுமான நிதியை திரட்ட புதுமையான நிதி கருவிகளை கண்டறிய வேண்டியதன் அவசியத்தைப் பொருளாதார ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.
3. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSMEs): MSME களின் வளர்ச்சிக்கு கடன் வழங்குவதில் உள்ள இடைவெளியை அரசு பூர்த்தி செய்ய வேண்டும். MSME நிறுவனங்களுக்கான கடுமையான ஒழுங்குமுறை விதிகள் குறைப்பு, பிசிக்கல் மற்றும் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்துதல், MSME-கள் வர்த்தக சந்தையை விரிவுபடுத்தவும், வளர்ச்சியடையச் செய்யவும் ஏற்றுமதி உத்தியை உருவாக்குதல் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது.
4. வேளாண்மை: இந்தியாவின் வளர்ச்சிக்கு வேளாண்மைத் துறை முக்கிய தூணாக உள்ளது. எனவே, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைக்கு உகந்த விவசாயிகளுக்கு ஆதரவான கொள்கைகள் மூலம் வேளாண்மைத் துறையின் வளர்ச்சியையும், அதன் பங்களிப்பையும் உறுதி செய்ய வேண்டும்.
5. திறன் மேம்பாடு: இந்தியர்கள் மத்தியில் உள்ள திறன் இடைவெளியை பூர்த்தி செய்ய, அரசின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு கொள்கைகள், மாணவர்களின் கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய ஒற்றுமை கொள்கை (EU Cohesion Policy) போன்ற உலக அளவிலான அனுபவங்களில் இருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ளலாம் என பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது.

6. மாநில அரசின் திறன் மேம்பாடு: மேற்கூறிய அனைத்து உத்திகளும் வெற்றிபெற, இந்தியா தனது மாநிலங்களின் அரசின் திறனை மேம்படுத்த வேண்டும். மாநில அரசின் நிர்வாக புதுப்பித்து, அதன் செயல்திறனை மேம்படுத்த அதில் அதிகப்படியான முதலீடு செய்வது அவசியம் என பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த ஆறு விஷயங்களை செயல்படுத்துவது மூலம் மத்திய அரசின் அம்ரித் கால் மற்றும் விக்சிட் பாரத் 2047 ஆகியவற்றின் இலக்குகளை அடைய முடியும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications