தமிழ்நாட்டை பாராட்டி தள்ளிய மத்திய அரசு.. பொருளாதார ஆய்வறிக்கையில் தரமான சம்பவம்..!!

மத்திய அரசு இன்று வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்திய இரண்டு முக்கிய திட்டங்களை பெரிய அளவில் பாராட்டியுள்ளது. தமிழ்நாடு அரசின் காலணி உற்பத்தித் துறையில் வளர்ச்சியை ஊக்குவிக்க செய்த முயற்சிகள் மற்றும் "இல்லம் தேடி கல்வி" திட்டத்தின் மூலம் கல்வியில் இருக்கும் இடைவெளிகளை சரிசெய்ய எடுக்கப்பட்ட முயற்சிகளையும் பெரிய அளவில் பாராட்டியுள்ளது.

இந்தியாவின் தோல் பொருட்களை தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ்நாடு, தோல் அல்லாத காலணி உற்பத்தித் துறையை நோக்கி தீவிரமாக மாற்ற கடந்த சில வருடங்களாக முயற்சி வருகிறது. இந்த பயணத்தில் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் காலணி தயாரிப்பு பூங்கா அமைப்பது மட்டும் அல்லாமல் பல வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்த்து தமிழ்நாட்டை முக்கிய காலணி தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி ஹப் ஆக மாறியுள்ளது.

தமிழ்நாட்டை பாராட்டி தள்ளிய மத்திய அரசு.. பொருளாதார ஆய்வறிக்கையில் தரமான சம்பவம்..!!

இதன் மூலம் இந்தியாவின் தோல் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க பங்கீட்டை தமிழ்நாடு கைப்பற்றியுள்ளது.பெரிய அளவிலான காலணி உற்பத்தியாளர்களை ஈர்ப்பதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்து தமிழ்நாடு அரசு இதில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக, காலணி உற்பத்தி துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய தளமாக மாற்றியுள்ளது.

இதேவேளையில் காலணி உற்பத்தி பூங்கா அனைத்தும் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டத்தில், அதிலும் குறிப்பாக கிராமபுறத்தில் அமைத்துள்ளது. இதன் மூலம் கிராமப்புறங்களில் தொழில்துறை வளர்ச்சியும், தனிநபர் வருமானமும் அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டின் முயற்சிகள் ஏற்கனவே பலன்களைத் தந்துள்ளன. தைவானின் Feng Tey போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் நைக்கி நிறுவனத்திற்காக ஒப்பந்த உற்பத்தி பிரிவுகளை அமைத்துள்ளன. மேலும், மாநில முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பான கைடென்ஸ், பவு சென், ஹாங் ஃபு, டேக்வாங், சாங்ஷின் போன்ற முக்கிய காலணி உற்பத்தியாளர்களுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை, காலணித் துறையில் முதலீடு செய்வதற்கான விருப்பமான இலக்காக தமிழ்நாட்டை மாற்றியுள்ளது என மத்திய அரசு தனது பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கை, தமிழ்நாடு அரசின் "இல்லம் தேடி கல்வி" திட்டத்தையும் பாராட்டியுள்ளது. கொரோனா தொற்றுநோய் காலத்தில் மாநிலம் முழுவதும் பிள்ளைகளை கல்வி பயில முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் எழுந்த கற்றல் இடைவெளிகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட முக்கியமான முயற்சியாக உருவாக்கப்பட்டது தான் இந்த திட்டம்.

ஆன்லைன் வாயிலாக கல்வி கற்பிக்கும் முறை மூலம் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான நேரடி தொடர்பின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, இந்த திட்டம் நேரடியாக மாணவர்களின் வீடுகளுக்கு கல்வியை கொண்டு செல்கிறது. இல்லம் தேடி கல்வி திட்டம் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்துள்ளது.

காலணித் தொழிலுக்கான சாதகமான சூழலை உருவாக்குதல் மற்றும் புதுமையான கல்வித் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்கு சமமான வாய்ப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு அரசின் முயற்சிகள் பெரும் பலனை கொடுத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+